குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

தேர்வு அறையை கண்காணிக்க 4 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படை

தேர்வுக் கால கண்காணிப்புக்காக மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்டத் தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

Published On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

தேர்வுக் கால கண்காணிப்புக்காக மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்டத் தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் கல்வித்துறை அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவார்கள். இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வருவாய் அலுவலர், சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

மேலும், தேர்வு மையங்களில் ஆய்வு செய்வதற்காக சுமார் 4 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படை, நிலையான படைகள் ஆகியன முதன்மைக் கல்வி அலுவலர்களால் நியமிக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் தேர்வு மைய வளாகத்துக்குள் செல்லிடப்பேசியை எடுத்து வருவது தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும் தேர்வு அறையில் செல்லிடப்பேசியை வைத்திருக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுகளை மீறி, தகவல் தொடர்பு சாதனங்களை வைத்திருக்கும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று தேர்வுத் துறை எச்சரித்துள்ளது.

அதேபோல், துண்டுத் தாள் (பிட்) வைத்திருத்தல், பிற மாணவர்களைப் பார்த்து எழுதுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல், ஆள்மாறாட்டம் போன்ற ஒழுங்கீனங்கள், முறைகேடுகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்.

ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாகவும், அதை ஊக்குவிக்கும் விதமாகவும் பள்ளி நிர்வாகம் செயல்பட்டால், பள்ளியின் தேர்வு மையத்தை ரத்து செய்யவும், பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் பள்ளிக் கல்வித் துறை இயக்குநருக்குப் பரிந்துரைக்கப்படும் என்று அரசுத் தேர்வுத் துறை எச்சரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.