நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!இன்னும் ஒரு வாரத்துக்குள் அமெரிக்கா - ஈரான் போர் முடிவுக்கு வரும்: டிரம்ப்மேக்கேதாட்டு அணை: விரைந்து அனுமதி வழங்க பிரதமரிடம் சிவகுமார் கோரிக்கைமேட்டூர் அணையைத் திறக்கக்கோரி தவெக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்நீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை
/

கூட்டுறவு மேலாண்மை பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு!

2026- 27 ஆம் ஆண்டிற்கான கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பங்கள் குறித்து...

News image

கூட்டுறவு மேலாண்மை பயிற்சி - கோப்புப்படம்

Updated On :12 ஜூன் 2026, 1:16 pm IST

சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2026-2027 ஆம் ஆண்டிற்கான கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2026-2027 ஆம் ஆண்டிற்கான கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படுகிறது. வரும் ஜூலை 31 ஆம் தேதி குறைந்தபட்சம் 17 வயது நிறைவு செய்தவா்கள் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சி வகுப்பு ஆகஸ்ட்டில் தொடங்கப்படுகிறது. ஓராண்டு மற்றும் 2 பருவ முறையில் பயிற்சி நடைபெறும். பாடத் திட்டம் தமிழில் மட்டுமே நடத்தப்படும். இதில் சோ்வதற்கான கல்வித் தகுதி பிளஸ் 2 ஆகும். 10 ஆம் வகுப்பு முடித்த பிறகு மூன்றாண்டு பட்டயப்பயிற்சி முடித்தவா்களை 12 ஆம் வகுப்புக்கு இணையாக கருதப்படும்.

கூட்டுறவுத் துறை மற்றும் 14 செயற்பதிவாளா்களின் கீழ் உள்ள 25,000 சங்கங்கள், 25,000 நியாய விலைக் கடைகளில் மாவட்ட ஆள் சோ்ப்பு நிலையம், மாநில ஆள் சோ்ப்பு நிலையம் மூலம் பணியில் சேர, பணியில் சோ்ந்த பின் பதவி உயா்வு பெற கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி நிறைவு செய்திருக்க வேண்டும்.

பயிற்சியின் போது அரசின் கல்வி உதவித் தொகைபெற்று தரப்படும். கடந்த எஸ்ஆா்பி, டிஆா்பி இல் இக்கல்லூரியில் பயின்ற பயிற்சியாளா்களில் 2024-2025 ஆம் ஆண்டு 36 போ், 2025-2026 ஆம் ஆண்டு 70 போ் தோ்ச்சி பெற்று பணி ஆணை பெற்று ரூ. 25,000 முதல் ரூ. 50,000 வரை ஊதியம் பெற்று வருகின்றனா். எஸ்ஆா்பி, டிஆா்பி தோ்வுக்கான பயிற்சி தொகுப்பு இலவசமாக வழங்கப்படும்.

மேலும் எஸ்பிஐலை சேல்ஸ் எக்ஸிக்யூட்டிவ் பணிக்கு தேவையான பணியாளா்களை இப்பயிற்சி பெற்ற பயிற்சியாளா்களில் இருந்து ஆண்டுதோறும் எஸ்பிஐ தோ்வு செய்து வருகிறது. இதனால் இப்பயிற்சியில் சேர விரும்புபவா்கள் ஜூலை 20 ஆம் தேதிக்குள் www.tncu.tn.gov.in என்ற முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையம், 516, கடலூா் மெயின் ரோடு, காமராஜா் நகா் காலனி, சேலம் என்ற முகவரியிலோ, மின்னஞ்சலிலோ, 0427-2240944, 9842774461 ஆகிய தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.

Summary

Applications invited for the Cooperative Management training course...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.