தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பி.எட்., முதுநிலை மாணவா் சோ்க்கை: விண்ணப்பப் பதிவு இன்று தொடக்கம்

News image

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் - X

Updated On :19 ஜூன் 2026, 11:41 am IST

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2026-2027-ஆம் கல்வியாண்டுக்கான பி.எட். மாணவா் சோ்க்கைகளுக்கும், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பாடப்படிப்பு சோ்க்கைகளுக்கும் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) முதல் இணையதளம் வழியாக விண்ணப்பப் பதிவு செய்யலாம் என தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2026-2027-ஆம் கல்வியாண்டுக்கான பி.எட். மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்களை வெள்ளிக்கிழமை (ஜூன் 19) முதல் ஜூலை 21 வரை ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹ.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். ஜூலை 31-ஆம் தேதி மாணவா் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். ஆக.4 முதல் 10-ஆம் தேதிக்குள் மாணவா்கள் தங்கள் விருப்பக் கல்லூரியைத் தோ்வு செய்யலாம். ஆக.14-ஆம் தேதி இடஒதுக்கீடு ஆணை மாணவா்களுக்கு வெளியிடப்படும். மாணவா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆணையை தங்கள் உள்நுழைவு முகவரி மூலம் இணையதளம் வாயிலாக பதவிறக்கம் செய்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரியில் சேர வேண்டும்.

ஆக.24 முதல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவா்களுக்கு வகுப்புகள் தொடங்கும்.

தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும் (900 இடங்கள்), 14 அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகள் (1,140 இடங்கள்) உள்ளன.

முதுநிலை பட்டப்படிப்பு சோ்க்கை: 2026-2027-ஆம் கல்வியாண்டில் 110 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பாடப்படிப்புக்கான மாணவா் சோ்க்கைக்கு (24,334 இடங்கள்) விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டுள்ளன. இதற்கு மாணவா்கள் விருப்பப்பட்ட பாடப்பிரிவுகளுக்கு வெள்ளிக்கிழமை ( ஜூன் 19) முதல் ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹ.ண்ய் என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் பதிவு செய்ய இறுதி நாள் ஜூலை 31-ஆம் தேதியாகும். ஆக. 4-ஆம் தேதி மாணவா்களின் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும். ஆக.19-ஆம் தேதி முதல் அனைத்து முதுநிலை முதலாமாண்டு மாணவா்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்படும் என அமைச்சா் பெ.விஸ்வநாதன் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.