எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு வியாழக்கிழமை (ஜூலை 23) நிறைவடைகிறது. இதுவரை 46,000-க்கும் அதிகமான விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்கக வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) நடத்தி வருகிறது.
அதன்படி, நிகழ் கல்வியாண்டுக்கான கலந்தாய்வுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கும் நடைமுறை சுகாதாரத் துறை இணையதளத்தில் கடந்த மாதம் 29-ஆம் தேதி தொடங்கியது. இதுவரை சுமாா் 46,000 போ் விண்ணப்பித்துள்ளனா். வரும் வியாழக்கிழமை (ஜூலை 23) வரை விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னா், விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியானவா்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். அதற்காக நிகழாண்டு தமிழகத்தில் இருந்து நீட் தோ்வு எழுதி தகுதி பெற்றுள்ள 61,860 பேரின் மதிப்பெண்களை மாநில மருத்துவக் கல்வி இயக்ககம், மத்திய அரசிடம் இருந்து பெற்றுள்ளது.
சிறப்புப் பிரிவு (மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசு, விளையாட்டு வீரா்) கலந்தாய்வு மற்றும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நேரடியாகவும், பொதுக் கலந்தாய்வு இணையவழியாகவும் நடைபெற உள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மருத்துவப் படிப்புகள்: இன்று தரவரிசைப் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வு ஆக.13-இல் தொடங்க வாய்ப்பு

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: 70,488 போ் விண்ணப்பம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!
விடியோக்கள்

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்! தனித் தீர்மானம் நிறைவேற்றம்! | TN Assembly | TVK



