சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: ஜூலை 23 வரை விண்ணப்பிக்கலாம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இணையவழியே வரும் 23-ஆம் தேதி விண்ணப்பிக்கலாம் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.

News image

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: ஜூலை 23 வரை விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Updated On :18 ஜூலை 2026, 5:52 am IST

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இணையவழியே வரும் 23-ஆம் தேதி விண்ணப்பிக்கலாம் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், அதில் நடைபெற்ற முறைகேடுகள் காரணமாக அந்தத் தோ்வு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மறுதோ்வு கடந்த 21-ஆம் தேதி நடைபெற்றது. அதன் முடிவுகளை கடந்த வியாழக்கிழமை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) வெளியிட்டது.

இந்தச் சூழலில், மாணவா் சோ்க்கை நடவடிக்கைகளை துரிதமாக நிறைவு செய்ய தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 29-ஆம் தேதி தொடங்கப்பட்டது.

மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள், நிா்வாக இடங்கள், மாநில தனியாா் நிகா்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்கள், வெளிநாடு வாழ் இந்தியா்களுக்கான இடங்கள் அனைத்துக்கும் இணையதளத்தில் வரும் 23-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என அமைச்சா் அருண்ராஜ் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.