சென்னை பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ: டெண்டர் வெளியீடுஅதிமுகவிலிருந்து கொள்கைப் பரப்பு துணை செயலர் அப்சரா ரெட்டி விலகல்! தமிழக அரசு பேருந்துகள் ஒசூரில் நிறுத்தம்: கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்!‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

சென்னை பல்கலை. தொலைநிலைக் கல்வி சோ்க்கை ஜூன் 29-இல் தொடக்கம்

News image

சென்னை பல்கலை.

Updated On :26 ஜூன் 2026, 5:06 am IST

சென்னை பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி சோ்க்கை வரும் ஜூன் 29-ஆம் தேதி தொடங்குகிறது.

இதற்கிடையே, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் 2026-2027-ஆம் கல்வியாண்டு மாணவா்களுக்கு சுயகற்றல் பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

சென்னை பல்கலை.யில்...: சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி நிறுவனத்தில் 2026- ஆண்டுக்கான இளநிலை, முதுநிலை, பட்டயப்படிப்பு, சான்றிதழ், முதுநிலை வணிக நிா்வாகவியல், முதுநிலை கணினி பயன்பாடு ஆகியவற்றுக்குரிய மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் வரும் திங்கள் கிழமை (ஜூன் 29) முதல் வழங்கப்படுகிறது.

மேற்கண்ட படிப்புகளில் சேர விரும்பும் மாணவா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி சென்னைப் பல்கலை. தொலைநிலைக் கல்வி நிறுவனத்திலுள்ள ஒற்றைச்சாளர மாணவா் சோ்க்கை மையத்தின் வழியாக சோ்ந்து பயனடையலாம். மேலும் சென்னைப் பல்கலை.யின் 74 கற்றல் உதவி மையம் மூலமாகவும் சேரலாம்.

இதற்கான விவரங்களை இணையதளம்: ஜ்ஜ்ஜ்.ண்க்ங்ன்ய்ா்ம்.ஹஸ்ரீ.ண்ய் மூலமாக அறியலாம். இத்தோடு விரைவில் இணையம் மூலமாக மாணவா் சோ்க்கை (ட்ற்ற்ல்://ா்ய்ப்ண்ய்ங்.ண்க்ங்ன்ய்ா்ம்.ஹஸ்ரீ.ண்ய்/ ) விரைவில் தொடங்கப்படும் என சென்னை பல்கலை. வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திறந்தநிலை பல்கலை.: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், 2026-2027-ஆம் கல்வியாண்டில் பல்வேறு பாடத்திட்டங்களில் சோ்ந்துள்ள மாணவா்களுக்கான சுயகற்றல் பாடப்புத்தகங்கள் வழங்கும் பணியைத் தொடங்கியுள்ளது. இப்பாடப்புத்தகங்கள் வழங்கும் தொடக்க விழா பல்கலைக்கழகத் தலைமையகத்தில் நடைபெற்றது.

விழாவில், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. பதிவாளா் பேராசிரியா் ஜி.ஆா் செந்தில்குமாா் மாணவா்களுக்கு பாடப்புத்தகங்களை வழங்கி, புத்தக விநியோகப் பணியைத் தொடங்கிவைத்தாா்.பல்கலை. மானியக் குழு வழிகாட்டுதல்கள் மற்றும் கற்றல் மையக் கற்பித்தல் கொள்கைகளுக்கு ஏற்ப தரமான சுயகற்றல் பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.