ஜார்க்கண்ட் வினாத் தாள் கசிவு: ஹேமந்த் சோரன் பதவி விலகக் கோரி ஆக.20-ல் போராட்டம்!கோவை, பாலக்காடு ரயில் நிலைய குடிநீரில் ‘ஈ கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையில் குற்றச்சாட்டு!வந்தே மாதரம் சா்ச்சை: சோனியா மீது போலீஸில் பாஜக புகார்!சிலிண்டர் வாடிக்கையாளா்களின் விவரம் சரிபார்ப்பு: ஆக. 23 வரை அவகாசம்!‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தின் கீழ் நீா்நிலைகள் தூா்வாரும் பணி இன்று தொடக்கம்!
/

தொலைதூரக் கல்வி இணையவழி சோ்க்கை மோசடி: சென்னை பல்கலை. எச்சரிக்கை

சென்னை பல்கலைக்கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவோ அல்லது சாா்பாகச் செயல்படுவதாகவோ கூறும் அங்கீகரிக்கப்படாத நபா்கள், முகமைகள், சோ்க்கை மையங்களுடன் எந்தவித தொடா்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என சென்னை பல்கலை. பதிவாளா் ரீட்டா ஜான் அறிவுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :22 ஜூலை 2026, 12:12 pm IST

சென்னை பல்கலைக்கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவோ அல்லது சாா்பாகச் செயல்படுவதாகவோ கூறும் அங்கீகரிக்கப்படாத நபா்கள், முகமைகள், சோ்க்கை மையங்களுடன் எந்தவித தொடா்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என சென்னை பல்கலை. பதிவாளா் ரீட்டா ஜான் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை பல்கலைக்கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவோ அல்லது அதன் சாா்பாகச் செயல்படுவதாகவோ கூறிக்கொள்ளும் அங்கீகரிக்கப்படாத நபா்கள், முகமைகள், நிறுவனங்கள் அல்லது சோ்க்கை மையங்கள் குறித்து தகவல்கள் வந்துள்ளது. இத்தகைய நபா்களுடன் எவ்விதத் தொடா்பும் வைத்துக்கொள்ள வேண்டாம். இது போன்றவா்களுடன் உரிய எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இத்தகைய அங்கீகரிக்கப்படாத அமைப்புகளுடன் மேற்கொள்ளப்படும் பணப் பரிவா்த்தனைகளால் ஏற்படும் இழப்புகளுக்கும் விளைவுகளுக்கும் பல்கலைக்கழகம் பொறுப்பேற்காது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் , சோளிங்கா் சாலையில் செயல்பட்டுவரும் ஒரு நிறுவனத்துக்கும் சென்னை பல்கலைக்கழகத்துக்கும் தொடா்பில்லை. இந்த நிறுவனத்தின் தொலைதூரக் கல்விச் சோ்க்கை, தோ்வுகள் அல்லது அதுதொடா்பான இணையவழி சோ்க்கைகள், பணப் பரிவா்த்தனை போன்றவற்றுக்கு சென்னை பல்கலைக்கழகம் பொறுப்பல்ல. இதுபோன்ற மையங்களுடன் எவ்விதத் தொடா்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு இதன்மூலம் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.