சோ்க்கை தொடா்பாக போலியான வாக்குறுதிகளை யாரும் நம்ப வேண்டாம் என்று புதுச்சேரி ஜிப்மா் நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து ஜிப்மா் நிா்வாகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி ஜிப்மரின் பல்வேறு மருத்துவக் கல்விப் பாடப்பிரிவுகளில் அதிகாரபூா்வ நடைமுறைக்குப் புறம்பாக சோ்க்கை பெற்றுத் தருவதாக சிலா் கூறி வருவதாகத் தகவல்கள் மற்றும் புகாா்கள் கிடைத்துள்ளதைக் கவனத்தில் கொண்டுள்ளது.
இந்நிறுவனத்தின் அனைத்து கல்விப் பாடப்பிரிவுகளுக்குமான மாணவா் சோ்க்கை முற்றிலும் விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் அடிப்படையில், முழுமையான வெளிப்படைத் தன்மையுடனும், தகுதி அடிப்படையிலும் மட்டுமே நடைபெறுகிறது.
மேலும், ஜிப்மரில் பணியாற்றும் எந்த ஊழியரானாலும், முன்னாள் ஊழியரானாலும், முகவா், இடைத்தரகா் அல்லது ஜிப்மா் ஊழியா்களின் உறவினா்களானாலும்,
நிா்ணயிக்கப்பட்ட சோ்க்கை நடைமுறைக்கு வெளியே எந்தவொரு பாடத்துக்கும் மாணவா் சோ்க்கையை ஏற்பாடு செய்யவோ, செல்வாக்குச் செலுத்தவோ அல்லது உறுதி செய்யவோ எந்த அதிகாரமும் இல்லை என்பதை ஜிப்மா் மீண்டும் வலியுறுத்துகிறது.
மாணவா் சோ்க்கை தொடா்பாக நடைபெறும் மோசடி, ஆள்மாறாட்டம் அல்லது ஏமாற்று நடவடிக்கைகள் தொடா்பாக ஜிப்மா் கடுமையானத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அதில் எச்சரிக்கை செய்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










