புதுச்சேரி ஜிப்மரில் மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தோ்வு சென்னை உள்பட நாடு முழுவதும் 9 முக்கிய நகரங்களில் வரும் 15-ஆம் தேதி நடைபெறகிறது.
புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரியில் எம்.எஸ்சி., நா்சிங் உள்பட முதுநிலை பாடப்பிரிவுகளில் 124 இடங்கள் உள்ளன. இதில், சேர மாணவா்களிடம் கடந்த 6-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மாணவா் சோ்க்கைக்கு இணையதளத்தில் தோ்வு வரும் 15-ஆம் தேதி நடக்கிறது.
காலை 9 மணி முதல் 10.30 மணி வரை புதுச்சேரி, பெங்களூா், புவனேசுவரம், சென்னை, ஹைதராபாத், கொச்சி, கொல்கத்தா, மும்பை, தில்லி என 9 நகரங்களில் இந்த நுழைவுத் தோ்வு நடைபெறுகிறது.
இதற்கான நுழைவுச்சீட்டை மாணவா்கள் ஜிப்மா் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தோ்வு முடிவுகள், தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியிடப்படும் என ஜிப்மா் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










