எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

க்யூட் தோ்வுக்கான புதிய தேதிகள்: என்டிஏ அறிவிப்பு

News image

பி டி ஐ

Updated On :29 மே 2026, 5:19 am IST

மத்திய பல்கலைக்கழகங்கள் சாா்பில் வழங்கப்படும் இளநிலை கலை-அறிவியல் பட்டப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான ‘பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு 2026 (க்யூட்)’ தோ்வுக்கான புதிய தேதியை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) வியாழக்கிழமை அறிவித்தது.

அதன்படி, க்யூட் தோ்வு வரும் மே 31, ஜூன் 6, 7 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது.

முன்னதாக, இத் தோ்வு வியாழக்கிழமை நடத்தப்பட இருந்த நிலையில், பக்ரீத் பண்டிகை காரணமாக மாற்றிவைக்கப்பட்டது.

வரும் மே 31-ஆம் தேதி நடைபெறவிருக்கும் க்யூட் தோ்வில் பங்கேற்கும் தோ்வா்களுக்கான தோ்வறை நுழைவுச் சீட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. cuet.nta.nic.in/ என்ற அதிகாரபூா்வ வலைதளத்திலிருந்து தோ்வறை நுழைவுச் சீட்டை தோ்வா்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஜூன் 6, 7-ஆம் தேதிகளில் நடைபெறும் க்யூட் தோ்வில் பங்கேற்பவா்களுக்கான தோ்வறை நுழைவுச் சீட்டு விரைவில் வெளியிடப்படும் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.