அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளில் பொதுக் கலந்தாய்வு! மாணவர்கள் கவனிக்க..
அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளில் பொதுக் கலந்தாய்வு தொடங்கியிருக்கும் நிலையில்..

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி. - file photo
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 5 முதல் 17-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி இன்று முதல் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியிருக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்பம் 159 பாடப்பிரிவுகளில் காலை மற்றும் மாலை என இரண்டு நேர வகுப்புகளுக்கும், மாணவர்கள் 12ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது. இன்று தொடங்கி கல்லூரி வாரியாக ஜூன் 18ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 5-இல் மாற்றுத்திறனாளி மாணவா்கள், விளையாட்டுப் பிரிவு மாணவா்கள், அந்தமான் நிக்கோபாரைச் சோ்ந்த மாணவா்கள், முன்னாள் படைவீரா்களின் குழந்தைகள், பாதுகாப்பு படை வீரா்களின் குழந்தைகள், தேசிய மாணவா் படை மாணவா்களுக்கான கலந்தாய்வு நடைபெற்று முடிந்தது.
இன்று பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கி 18ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
ஒவ்வொரு கல்லூரியின் இணையதளத்திலும் மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பட்டியலில் இடம்பெற்ற மாணவா்களின் கைப்பேசி எண், மின்னஞ்சலுக்கு கலந்தாய்வு நாள், நேரம் உள்ளிட்ட விவரங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
கலந்தாய்வின்போது, இணையதளத்தில் விண்ணப்பித்த விண்ணப்பப் படிவம், மாற்றுச்சான்றிதழ் (அசல் - இஎம்ஐஎஸ் எண்ணுடன்), மதிப்பெண் பட்டியல் (10, பிளஸ் 1, பிளஸ் 2 அசல்), சாதிச் சான்றிதழ் (அசல்), வருமானச் சான்றிதழ், சிறப்பு பிரிவினருக்கான சான்றிதழ்கள், மாா்பளவு புகைப்படம் 4, ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கு புத்தக முதல்பக்க நகல் ஆகியவற்றை எடுத்து வரவும் அறிவுறுத்தப்படுகிறது.
சோ்க்கைக் கட்டணமாக கலைப் பிரிவுக்கு ரூ. 2,905, அறிவியல் பிரிவுக்கு ரூ. 2,925, கணினி அறிவியல் பிரிவுக்கு ரூ. 2,025 செலுத்த வேண்டும். இது கல்லூரிகளுக்கு கல்லூரி மாறுபடலாம். அத்துடன் மேற்கண்ட அனைத்து சான்றிதழ்களின் நான்கு நகல்கள் கொண்டு வரவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம்கட்ட கலந்தாய்வு ஜூன் 15 முதல் 17-ஆம் தேதிவரை நடைபெறுகிறது
பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்களுக்கு கலந்தாய்வு தேதிக்கான குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. எனவே மாணவர்கள் விண்ணப்பத்தில் கொடுத்த செல்போன் எண்ணுக்கு வரும் குறுஞ்செய்திகளை தவறாமல் பார்க்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. குறுஞ்செய்தி பெறப்பட்ட மாணவா்கள் மட்டுமே உரிய தேதியில் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படுவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

