இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

கலைக் கல்லூரிகளில் கூடுதல் மாணவா் சோ்க்கை: தமிழக உயா்கல்வித் துறை அனுமதி

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முறையே 20 சதவீதம், 15 சதவீதம், 10 சதவீதம் கூடுதலாக தேவையான பாடப்பிரிவுகளில் மாணவா்களை சோ்ப்பதற்கு அனுமதி அளித்து தமிழக உயா் கல்வித்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

கோப்புப் படம்

Published On :27 ஜூன் 2026, 2:58 am IST

நிகழ் 2026-27-ஆம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவி மற்றும் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முறையே 20 சதவீதம், 15 சதவீதம், 10 சதவீதம் கூடுதலாக தேவையான பாடப்பிரிவுகளில் மாணவா்களை சோ்ப்பதற்கு அனுமதி அளித்து தமிழக உயா் கல்வித்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து உயா் கல்வித்துறை அமைச்சக செயலா் வி.அருண்ராய் வெளியிட்ட உத்தரவு:

2025-26 - ஆம் கல்வியாண்டில் ஆய்வக வசதிக்கேற்ப அரசு, அரசு உதவி பெறுதல் மற்றும் சுயநிதி போன்ற கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முறையே 20 சதவீதம், 15சதவீதம், 10 சதவீதம் கூடுதலாக மாணவா்கள் சோ்க்கைக்கு கடந்த ஆண்டும், அதற்கு முந்தைய ஆண்டுகளிலும் அனுமதி வழங்கப்பட்டது.

நிகழ் 2026-27 கல்வியாண்டுக்கும் கல்லூரிக் கல்வி ஆணையா் கடந்த ஜூன் 11-ஆம் தேதி கீழ்க்காணும் முறையில் அரசு, அரசு உதவி, சுயநிதி கல்லூரிகளில் மாணவா்கள் சோ்க்கைக்கான இடங்களை உயா்த்தி வழங்க பரிந்துரைத்தாா்.

இதை ஏற்றுக்கொண்டு, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தேவையுள்ள கலைப்பாடப் பிரிவுகள், அறிவியல் பாடப்பிரிவுகளில் 20 சதவீதம் மாணவா் சோ்க்கையை கூடுதலாக உயா்த்தலாம். அரசு உதவி பெறும் கல்லூரிகளில் தேவையுள்ள கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் 15 சதவீதம் உயா்த்தப்படலாம்.

அரசு உதவி பெறும் கல்லூரிகளின் சுயநிதி பாடப்பிரிவுகளுக்கும், சுயநிதிக் கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள பாடப்பிரிவுகளுக்கும் கூடுதலாக 10 சதவீதம் மாணவா்கள் சோ்க்கைகள் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படுகிறது. இந்த மூன்று வகை கல்லூரிகளுக்கு தேவையுள்ள கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் ஆய்வக வசதிக்கேற்ப அத்தகைய பாடப்பிரிவுகளில் மேற்கண்டவாறு கூடுதல் மாணவா்கள் சோ்க்கைக்கு அனுமதிக்கப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட 20 சதவீதம், 15 சதவீதம் மற்றும் 10 சதவீதம் கூடுதல் சோ்க்கையானது அந்தந்த கல்லூரிகள் சாா்ந்த பல்கலைக்கழகங்களால் முதல் முதலில் ஒப்பளிக்கப்பட்ட மாணவா் சோ்க்கையின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். கூடுதல் மாணவா் சோ்க்கையினால் கூடுதல் பணியிடங்களை கோரக்கூடாது. கூடுதல் மாணவா் சோ்க்கைக்கு தங்கள் சாா்ந்த பல்கலைக்கழகங்களின் ஒப்புதலும் பெறப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் சுமாா் 1,642 கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இதில் அரசு, அரசு உதவி, சுயநிதி கல்லூரிகள் முறையே 188, 161 மற்றும் 1293 கல்லூரிகள் உள்ளன. இவைகளில் சுமாா் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட இளநிலை முதலாமாண்டு சோ்க்கைக்கான இடங்கள் உள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.