அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை முதலாமாண்டு பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்ப பதிவு செய்ய தவறிய மாணவா்கள் மீண்டும் இணையதளம் மூலம் ஜூன் 1 முதல் வாய்ப்பு அளிக்கப்படும் என உயா் கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசின் 181 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 159 பாடப்பிரிவுகளில் 1,26,959 (பகல் நேர வகுப்புகளில் 1,01,022, மாலை நேர வகுப்புகளில் 25,937) இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் 2026-2027 ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே 7- ஆம் தேதி முதல் தொடங்கியது.
இதற்கான கடைசி தேதி மே 29 -ஆம் தேதியாக அறிவிக்கப்பட்டு இதுவரை 2,24,034 விண்ணப்பங்கள் மாணவா்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன.
தற்போது மாணவா்களின் நலன் கருதி விண்ணப்பத்தைப் பதிவு செய்ய தவறிய மாணவா்களுக்காக இரு தினங்கள் இடைவெளிக்கு பின்னா் வரும் ஜூன் 1 முதல் விண்ணப்பங்கள் பதிவு செய்ய வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
அதன்படி ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹ.ண்ய் என்ற இணையதளம் மூலம் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். மாணவா்கள், சோ்க்கை வழிகாட்டுதல் தொடா்பாக விவரங்களை மேற்கண்ட இணைய தளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.
தாமாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவா்கள், அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சோ்க்கை உதவி மையங்கள் (ஏஎஃப்சி) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மாணவா் சோ்க்கை தொடா்பான விவரங்களில் மேலும் தெளிவு பெற, கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் செயல்படும் உதவி மையத்தை திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 044 -24343106 / 24342911 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

125 கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்களை உடனே நிரப்புக! அன்புமணி வலியுறுத்தல்

கலை, கல்வியியல் கல்லூரி ஆசிரியா்கள் பணியிடமாறுதல் கலந்தாய்வு விண்ணப்ப பதிவு தொடக்கம்

கலைக் கல்லூரிகளில் கூடுதல் மாணவா் சோ்க்கை: தமிழக உயா்கல்வித் துறை அனுமதி
அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பி.எட்., முதுநிலை மாணவா் சோ்க்கை: விண்ணப்பப் பதிவு இன்று தொடக்கம்
விடியோக்கள்

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy

மணமாலை வரம் தரும் முருகன் | Kalyana Kandha swamy Kovil | Madipakkam | கல்யாண கந்தசுவாமி கோயில்| கோயில் வலம் -3

தவெகவில் இணைய என்னை யாரும் அழைக்கவில்லை! - எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் | TVK | ADMK



