நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் படித்து 10ஆம் வகுப்புத் தேர்வெழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. நாடு முழுவதும் தேர்வெழுதிய 93.7 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.
1.47 லட்சம் மாணவர்கள் இரண்டாம் கட்ட தேர்வை எழுத வேண்டிய நிலையில் உள்ளனர்.
சிபிஎஸ்இ நிர்வாகம், இன்று பிற்பகல் 4.30 மணியளவில் 10ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
மாணவர்கள் டிஜி லாக்கர் மற்றும் உமங் செயலி வாயிலாகவும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை cbse.gov.in, https://cbseresults.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
இந்த ஆண்டு பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் கடந்த பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி தொடங்கி மார்ச் 11ஆம் தேதி வரை நடைபெற்றது. தேர்வுகள் காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெற்று மிக விரைவாக விடைத்தாள்களை திருத்தும் பணி நடைபெற்றது.
ஏற்கனவே டிஜி லாக்கரில் தேர்வெழுதிய மாணவர்களின் விவரங்களை பதிவு செய்திருந்தவர்கள் மிக விரைவாக தேர்வு முடிவுகளை அறிந்துகொண்டனர்.
தேர்வு முடிவுகள் குறித்து மத்திய கல்வித் துறை அமைச்சர் இன்று மாலை 7 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கவிருக்கிறார்கள். அப்போதுதான், ஒட்டுமொத்த தேர்ச்சி நிலவரம் மற்றும் மாநில வாரியாக தேர்ச்சி நிலவரங்கள் தெரிய வரும் என்று கூறப்படுகிறது.
இந்த வாரம் தொடக்கத்திலிருந்தே நாள்தோறும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. காலையில் பெற்றோர்களும் மாணவர்களும் பரபரப்புடன் தேர்வு முடிவுகளை அறிய ஆவலோடு இணையதளங்களில் உலாவி வந்தனர்.
உமங் செயலிலும் விரைவில் 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. இது இன்னும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கிடையே யாரும் எதிர்பாராத வகையில் மாலை வேளையில் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை வெளியிட்டிருக்கிறது. இன்று தேர்வு முடிவுகள் வெளியாகாது என்று நினைத்திருந்த பெற்றோருக்கு இன்ப அதிர்ச்சியாக முடிவுகள் வெளியாகியிருக்கிறது.
இந்த ஆண்டு 10ஆம் வகுப்புத் தேர்வெழுதும் மாணவா்களின் நலனைக் கருத்தில்கொண்டு குறைந்த மதிப்பெண் பெறும் அல்லது பாடங்களில் தோல்வியுறும் மாணவா்கள் ஓராண்டு வரை காத்திராமல் உடனடியாக தோல்வியுற்ற பாடங்களுக்கான தோ்வை எழுதி அதிக மதிப்பெண் பெற வசதியாக நடப்பு 2026-ஆம் ஆண்டுமுதல் 10-ஆம் வகுப்புக்கு இரு பொதுத் தோ்வுகளை சிபிஎஸ்இ நடத்துகிறது.
எனினும், முதல் பொதுத் தேர்வை எழுதுவது மாணவர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்கும் அனைத்து மாணவா்களும் அறிவியல், கணிதம், சமூக அறிவியல் மற்றும் மொழிப் பாடங்களில் ஏதேனும் மூன்று பாடங்களில் தங்களின் மதிப்பெண்ணை உயா்த்திக்கொள்ளும் வகையில் இரண்டாவது பொதுத் தோ்விலும் பங்கேற்க அனுமதிக்கப்படுவா்.
அதே வேளையில், முதல் பொதுத் தோ்வில் குறைந்தபட்சம் மூன்று பாடங்களுக்கான தோ்வை எழுதத் தவறும் மாணவா்கள், நிகழாண்டின் இரண்டாவது பொதுத் தோ்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டாா்கள். இத்தகைய மாணவா்கள் பத்தாம் வகுப்பிலேயே மீண்டும் தொடர வேண்டிய அவசியம் ஏற்படும். இவா்கள், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடத்தப்படும் பொதுத் தோ்வில் மட்டுமே பங்கேற்க முடியும் என்றும் சிபிஎஸ்இ நிர்வாகம் தெளிவுபடுத்தியிருக்கிறது.
Summary
The results for students who studied under the CBSE curriculum and appeared for the Class 10th exams across the country have been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை டிஜிலாக்கரில் பதிவிறக்கம் செய்வது எப்படி?

இன்று வெளியாகுமா சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்? முழு விவரம்!

ஏப்ரல் 20ம் தேதி சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்?

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது? முன்கூட்டியே வெளியாக வாய்ப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


