மெக்கா மீது ஹெளதிகள் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்!அன்பில் மகேஸ் வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை!பாதுகாப்பு கருதி முதல்வர் விஜய்யின் லண்டன் நிகழ்ச்சி ரத்து!தாம்பரத்திலிருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்இன்று 6 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கைஆசிய விளையாட்டுப் போட்டிகள்: இந்தியா்கள் தயாராக ரூ. 800 கோடி செலவுஇந்தியா - நியூஸிலாந்து தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அடுத்த மாதம் அமல்சிஆா்பிஎஃப் கோப்ரா பிரிவுக்கு முதல் பெண் ஐ.ஜி

நிரப்பப்படாமல் இருக்கும் 1 லட்சம் பொறியியல் சேர்க்கை இடங்கள்!

தமிழ்நாட்டில் நிரப்பப்படாமல் இருக்கும் 1 லட்சம் பொறியியல் மாணவர் சேர்க்கை இடங்கள் பற்றி..

Anna university

பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு. - கோப்புப் படம்

Published On :

2026ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் கிட்டத்தட்ட 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பொறியியல் மாணவர் சேர்க்கை இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டு 81 சதவிகித பொறியியல் மாணவர்கள் இடங்கள் நிரப்பப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு நடந்து முடிந்த இரண்டு சுற்று பொறியியல் கலந்தாய்வில் இதுவரை வெறும் 41 சதவிகித இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன.

அதாவது, 1,81,436 மாணவர் சேர்க்கை இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இன்னமும் 1,06,778 இடங்கள் இறுதிச் சுற்றுக் கலந்தாய்வுக்காக காலியாக உள்ளன.

இரண்டாவது சுற்றில் 93 ஆயிரம் பேர் பங்கேற்றும், வெறும் 49 ஆயிரம் பேர் தான் சேர்க்கை பெற்றுள்ளனர்.

இறுதிச் சுற்று நிறைவடைந்த பிறகும் கிட்டத்தட்ட 45 ஆயிரம் இருக்கைகள் காலியாக இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 35 ஆயிரமாக இருந்தது.

மாணவர்கள் பெரும்பாலும் நகரப் பகுதிகளில் உள்ள கல்லூரிகளையே விரும்புவது ஒரு காரணமாக இருக்கலாம். இதனால், நகரப் பகுதிகளில் கலந்தாய்வு மூலம் சேர்க்கை கிடைக்காது என நினைக்கும் மாணவர்கள் நிர்வாகப் பிரிவில் சேர்க்கை பெறுவது அதிகரித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கணினி அறிவியல் பாடத்தில் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய மாற்றமும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்திருக்கக் காரணமாக இருக்கலாம்.

Summary

1 lakh engineering admission seats remain unfilled

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.