வாக்கு எண்ணிக்கையை நிறுத்த பாஜக முயற்சி! தேர்தல் ஆணையத்துக்கு திமுக கடிதம் ஈரானிலிருந்து திரும்பும் வழியிலேயே கியூபாவைக் கைப்பற்றலாம்: டிரம்ப் பேச்சு! விஜய்யை முன்வைத்து பல சூதாட்டங்கள்: தொல். திருமாவளவன்நாளைமுதல் கத்தரி வெய்யில் ஆரம்பம்!
/

பெரும்பான்மையுடன் வெற்றி!பாஜக வேட்பாளர் ரூ.1 கோடி பந்தயம்

பூஞ்சார் தொகுதியில் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவேன் என்று பாஜக வேட்பாளர் பி.சி. ஜார்ஜ் தெரிவித்தார்.

News image

பி.சி. ஜார்ஜ்

Updated On :3 மே 2026, 8:04 am

கேரளத்தில் பூஞ்சார் தொகுதியில் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவேன் என்று பாஜக வேட்பாளர் பி.சி. ஜார்ஜ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து தொலைக்காட்சிக்கு ஒன்றிற்கு அளித்த பேட்டியில், நான் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். இதில் யாருக்காவது சந்தேகம் இருந்தால், அவர்கள் முன்வந்து ரூ. 1 கோடிக்கு பந்தயம் கட்டலாம். பக்கத்து தொகுதியான பாலாவில் போட்டியிடும் தனது மகன் ஷோன் ஜார்ஜும் வெற்றி பெறுவார்.

வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தந்தை-மகன் இருவரும் ஒன்றாக அவைக்குள் நுழைவதை கேரளம் காணும். ராஜீவ் சந்திரசேகர் தலைமையில் மாநிலம் முழுவதும் பா.ஜ.க குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெறும். மாநிலத்தில் எந்த முன்னணியும் தெளிவான பெரும்பான்மையைப் பெறாமல், தொங்கு சட்டப்பேரவையே அமையும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநிலத்தில் சுமார் 11 இடங்களை வெல்லும் என்றார். சமீபத்தில் சில தேவாலயத் தலைவர்களை விமர்சித்ததன் மூலம் ஜார்ஜ் சர்ச்சையில் சிக்கினார். 140 இடங்களைக் கொண்ட கேரள சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெற்றது. இதன் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் நாளை(திங்கள்கிழமை) அறிவிக்கப்பட உள்ளன.

Summary

Senior politician and BJP candidate P C George on Sunday said he was confident of a resounding victory from the Poonjar Assembly constituency in Kerala, even offering to place a bet of Rs 1 crore to back his claim.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.