

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சோளிங்கரில், வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டர்.
அப்போது பேசிய அவர், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தோல்வி பயத்தில் உள்ளனர். நான் பேசுவதில் எது பொய் என்று கூறினால் பதில் சொல்லத் தயாராக இருக்கிறேன்.
திமுகவின் மிரட்டல்களுக்கு அதிமுக அடிபணியாது. திமுகவினரின் தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம்.
மூன்று ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு செய்தது என்ன?. ரூ.3 லட்சம் கோடி ரூபாய் கடன் மட்டுமே அரசு வாங்கியுள்ளது. விதவிதமான வாக்குறுதிகளை அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களை ஏமாற்றியுள்ளார். விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது.
பொய் பேசுவதற்கு நோபல் பரிசு அறிவித்தால் அது முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கிடைக்கும். காலச்சக்கரம் சுழன்றபடி இருக்கிறது. கீழே இருக்கும் சக்கரம் மேலே வரும். மக்களை இனி ஏமாற்ற முடியாது. திமுகவின் வாரிசு அரசியலுக்கு இந்தத் தேர்தலுடன் மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என எடப்பாடி பழனிசாமி பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.