/

கர்நாடக மாநில அதிமுக செயலாளர் ராஜிநாமா!

கர்நாடகத்தில் அதிமுகவை ரப்பர் ஸ்டாம்ப் கட்சியாக வைத்துள்ளதாக குற்றச்சாட்டு.

News image
எடப்பாடி பழனிசாமி- கோப்புப்படம்
Updated On :10 ஏப்ரல் 2024, 7:58 am

DIN

கர்நாடக மாநிலத்தின் அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக புதன்கிழமை தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்கப்பட்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஒசூரில் செய்தியாளர்களை சந்தித்து எஸ்.டி.குமார் பேசியதாவது:

“கர்நாடகத்தில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி அனுமதிக்கவில்லை. அதனால் கட்சியின் பொறுப்பில் இருந்து என்னை விடுவிக்குமாறு ஏற்கெனவே அவரிடம் தெரிவித்திருந்தேன்.

கிருஷ்ணகிரியில் பிரசாரத்துக்கு வந்தபோது அவரை சந்திக்க சென்ற கர்நாடக கட்சி நிர்வாகிகளை அவமதித்தார்கள். யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியவில்லை.

ஏற்கெனவே சட்டப்பேரவை தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்தது. கர்நாடகத்தில் அதிமுகவை ரப்பர் ஸ்டாம்ப் கட்சியாக வைத்துள்ளனர்.” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.