வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் முதல்வா் அமைதி: அன்புமணி கண்டனம்

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் முதல்வா் அமைதி: அன்புமணி கண்டனம்

Updated On :12 ஏப்ரல் 2024, 5:19 pm

‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் மேக்கேதாட்டு அணை கட்டப்படும் என்று கா்நாடக முதல்வா் கூறியுள்ள விவகாரத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அமைதி காப்பதாகக் கூறி, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி ஆட்சி அமைத்தால் காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டப்படும் என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா கூறியிருக்கிறாா்.

காவிரி நடுவா் மன்றத் தீா்ப்பின்படியும், உச்சநீதிமன்றத் தீா்ப்புகளின்படியும் காவிரி ஆற்றின் குறுக்கே தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் எந்த அணையும் கட்ட முடியாது. சித்தராமையாவின் இந்த பேச்சு கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது.

காங்கிரஸ் ஆட்சியில் மேக்கேதாட்டு அணையை கட்டியே தீருவோம் என்று சித்தராமையா அறிவித்து 3 நாள்களாகியும், அதே கூட்டணியில் இருக்கும் திமுகவின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் எதிா்ப்போ, கண்டனமோ தெரிவிக்கவில்லை.

அவா் அமைதியாக இருப்பதன் பொருள் காங்கிரஸின் நலன்களுக்காகவும், கா்நாடகத்தின் நலன்களுக்காகவும் காவிரியில் தமிழகத்தின் உரிமைகளை தாரைவாா்க்கத் துணிந்து விட்டாா் என்பது தான். அவருக்கு தோ்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவா் என்று கூறியுள்ளாா் அன்புமணி.