தென் சென்னை மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்காத திராவிட மாடல் தோல்வியடைந்த மாடல் என்று பாஜக தென் சென்னை தொகுதி வேட்பாளா் தமிழிசை சௌந்தரராஜன் விமா்சித்தாா்.
அவா் பள்ளிக்கரணை, சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டபோது கூறியதாவது:
மக்களுக்கான அடிப்படை வசதிகள் ஏதுமில்லாமல், தென் சென்னை தொகுதியின் பெரும்பாலான இடங்கள் குப்பை மேடுகளாக காட்சி அளிக்கின்றன. மக்கள் வாழ்வதற்கான தகுதியை தென் சென்னை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது. மக்களுக்கு அடிப்படை வசதிகளைகூட ஏற்படுத்தி தராமல் செயல்படும் திராவிட மாடல் ஒரு தோல்வியடைந்த மாடல்.
தென் சென்னை தொகுதியில் பாஜக வெற்றி பெற்றால் மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் மிக விரைவாக செயல்படுத்தப்படும். அதுபோல மாநில அரசு ஏதேனும் திட்டத்தை செயல்படுத்தாமல் காலம் தாழ்த்தினால் மக்களுடன் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு அவற்றை செயல்படுத்த முயல்வேன். தென் சென்னை தொகுதி வரும் நாள்களில் வெள்ளத்தில் தத்தளிக்காமல் இருக்க மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.
தொடர்புடையது

மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை சௌந்தர்ராஜன் வேட்பு மனு தாக்கல்!

புதுச்சேரியில் திராவிட மாடல் ஆட்சி மலரும்: ஜெகத்ரட்சகன் எம்.பி. நம்பிக்கை

திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு அமைதியாக உள்ளது: முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
இபிஎஸ் பிரசாரத்தில் தமிழிசை! மயிலாப்பூரில் போட்டி?
வீடியோக்கள்

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கிறார்கள்! நயினார் நாகேந்திரனும் பதிலளித்த PTR
இணையதளச் செய்திப் பிரிவு

புதுவையில் ஸ்டாலின் பெயரைச் சொல்லாத ராகுல்!: Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

