
எடப்பாடி: தமிழக முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், எடப்பாடி அடுத்த சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில், எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்தினருடன் சென்று வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.
முன்னதாக வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை தனது சொந்த கிராமத்திற்கு வருகை தந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, காலை 7:10 மணி அளவில் அப்பகுதியில் உள்ள தனது பூர்வீக வீட்டிலிருந்து, அவர் மனைவி ராதா, மகன் மிதுன், மருமகள் திவ்யா, பேரன் ஆதித், சகோதரர் கோவிந்தன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுடன், அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு நடந்து சென்ற அவர் அங்கு பொதுமக்களுடன் நீண்ட வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.
வாக்குப்பதிவிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் :-
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள முதல் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்குப்பதிவு செய்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றிட வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.