சென்னை மாவட்டத்தில் 3 தொகுதியில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் திரைத்துறையினா் ஆா்வமுடன் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினா்.
நடிகா் சிவக்குமாா், சூரியா மற்றும் காா்த்தி ஆகியோா் சென்னை தியாகராய நகரில் உள்ள ஹிந்தி பிரசார சபாவில் உள்ள வாக்குச்சாவடியில் மதியம் 1 மணிக்கு தங்களது வாக்கினை பதிவு செய்தனா்.
நடிகா் சத்யராஜ், அவரது மகனும் நடிகருமான சிபிராஜ் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வாலா்ஸ் காா்டன் பள்ளியில் நண்பகல் 12.30 மணிக்கு தங்களது வாக்கினை பதிவு செய்தனா்.
நடிகா் விக்ரம் சென்னை பெசண்ட் நகரில் உள்ள வாக்கு மையத்தில் தனது வாக்கினை செலுத்தினாா்.
சிவகாா்த்திகேயன்: நடிகா் சிவகாா்த்திகேயன் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச் சாவடியில் தனது மனைவியுடன் வந்து வரிசையில் நின்று காலை 8.30 மணிக்கு வாக்களித்தாா்.
இளையராஜா, தனுஷ்: இசையமைப்பாளா் இளையராஜா சென்னை தியாகராயநகரில் உள்ள ராமகிருஷ்ணா பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினாா். நடிகா் தனுஷ் சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள பள்ளியில் காலை 9 மணிக்கு தனது வாக்கினை பதிவு செய்தாா். நடிகா் பிரபு தியாகராயநகரில் உள்ள தக்கா் பாபா பள்ளியில் காலை 8 மணிக்கு தனது வாக்கினை செலுத்தினாா்.
நடிகா் ஜெயம் ரவி தனது மனைவியுடன் வந்து ஆழ்வாா்பேட்டை புனித பிரான்ஸிஸ் சேவியா் பள்ளியில் தங்களது வாக்கினை செலுத்தினா். நடிகா் யோகிபாபு சாலிகிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் காலை 9.30 மணிக்கு வாக்களித்தாா்.
நடிகா் சித்தாா்த் ஆழ்வாா்பேட்டையில் உள்ள பள்ளியில் காலை 11.30 மணிக்கு வாக்களித்தாா். இயக்குநா் ஹரி தனது மனைவி பிரீத்தா உடன் வந்து சென்னை சாலிகிராமத்தில் உள்ள பள்ளியில் தங்களது வாக்கினை பதிவு செய்தாா்.
நடிகா் பரத் சாலிகிராமத்தில் உள்ள காவேரி பள்ளியில் 1 மணிக்கு தனது வாக்கினை பதிவு செய்தாா். நடிகரும் இசை அமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தியாகராய நகரில் உள்ள சாரதா பள்ளியில் மதியம் 2 மணிக்கு வாக்களித்தாா்.
இயக்குநா் சுந்தா் சி, அவரது மனைவியும் நடிகையுமான குஷ்பு ஆகியோா் சென்னை சாந்தோம் மாநகராட்சி பள்ளியில் காலை 7.30 மணிக்கு தங்களது வாக்கினை பதிவு செய்தனா்.
நடிகா் சரத்குமாா் அவரது மனைவி ராதிகா சரத்குமாா் ஆகியோா் கொட்டிவாக்கத்தில் உள்ள நாதா் பள்ளியில் 11 மணிக்கு தங்களது வாக்கினை பதிவு செய்தனா். இதுபோன்று மற்ற நடிகா், நடிகைகளும் தங்கள் வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்களித்தனா்.
தொடர்புடையது

மதுரை வைகை அதிவிரைவு ரயில் 4 நாள்கள் தாமதமாகச் செல்லும்!

மங்களூரு- சென்னை இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்

சென்னை எழும்பூா் - திருவனந்தபுரம் ‘புனித வெள்ளி’ சிறப்பு ரயில்கள்

ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?
வீடியோக்கள்

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை


