மாற்றத்தைக் கொடுத்த பாரத் ஜோடோ யாத்திரை!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்ட பாரத் ஜோடோ பாத யாத்திரை இந்தியா கூட்டணிக்கு பலமாக அமைந்துள்ளது.


மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தியளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. ஆனாலும், இந்தியா கூட்டணி வேட்பாளர்களும் குறைவான வாக்குகள் வித்தியாத்திலேயே பின்னடைவில் இருப்பதால், ஆட்சியைக் கைப்பற்றுவது யார்? என்னும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கேரளத்தின் வயநாட்டில் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டிலும் முன்னிலை வகித்து வருகிறார். இதனால், பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் தன் வெற்றியைப் பதிவு செய்ய உள்ளார்.
முக்கியமாக, 2019 தேர்தலைக் கணக்கில்கொண்டால் இம்முறை காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையாக 95 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா கூட்டணி மொத்தமாக 228 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

பாரத் ஜோடோ பாத யாத்திரையில்..
இந்த நிலையில், தேர்தலுக்கு முன் ராகுல் காந்தி நாடு முழுவதும் பாரத் ஜோடோ பாத யாத்திரையை மேற்கொண்டது இந்தத் தேர்தல் முடிவுகளில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்திருப்பதாக பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். 2022 செப்டம்பர் மாதம் துவங்கிய இப்பாத யாத்திரையில் இந்தியா முழுவதும் நடந்தே சென்று மக்களைச் சந்தித்து கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.
தற்போதைய முடிவுகள் கடந்த தேர்தலைவிட காங்கிரஸுக்குச் சாதகமாக மாறி வருவதால் பாரத் ஜோடோ யாத்திரைக்கு முக்கியப் பங்கு இருப்பதாகவேத் தோன்றுகிறது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...