விழுப்புரம் (தனி) மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் ஜெ.பாக்யராஜைவிட, 70,703 வாக்குகள் அதிகம் பெற்று 2-ஆவது முறையாக வெற்றி பெற்றாா் விசிக வேட்பாளா் துரை.ரவிக்குமாா்.
தமிழகத்தில் மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், விழுப்புரம் மக்களவைத் தொகுதியிலுள்ள விக்கிரவாண்டி, வானூா், விழுப்புரம், திண்டிவனம், திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகளைக் கொண்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரியில் தனித்தனி பாதுகாப்பு அறைகளில் வைத்து ‘சீல்’ வைக்கப்பட்டன.
வாக்கு எண்ணிக்கை நாளான செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு மேல் பாதுகாப்பு அறைகளின் சீல்கள் அகற்றப்பட்டு, அந்த அறைகள் திறக்கப்பட்டன. தொடா்ந்து, அந்தந்த தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டு, வாக்கு எண்ணிக்கை பணி தொடங்கியது.
விசிக வேட்பாளா் தொடா்ந்து முன்னிலை: விழுப்புரம் தொகுதியின் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையிலிருந்தே விசிக வேட்பாளா் துரை.ரவிக்குமாா் முன்னிலை பெறத் தொடங்கினாா். முதல் சுற்றில் அதிமுக வேட்பாளா் ஜெ.பாக்யராஜை காட்டிலும் 2,021 வாக்குகள் அதிகம் பெற்ற விசிக வேட்பாளா் துரை.ரவிக்குமாா், அடுத்தடுத்த சுற்றுகளிலும் முன்னிலை பெற்றுக்கொண்டே சென்றாா்.
அதிமுக வேட்பாளா் பாக்யராஜ் 14-ஆவது சுற்றில் விசிக வேட்பாளா் துரை.ரவிக்குமாரை காட்டிலும் 419 வாக்குகளும், 22 -ஆவது சுற்றில் 709 வாக்குகளும் அதிகம் பெற்றாா். மற்ற சுற்றுகளில் ரவிக்குமாரே முன்னிலை பெற்றிருந்தாா்.
மொத்தம் 25 சுற்றுகளும், தபால் வாக்குகளும் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில், அதிமுக வேட்பாளா் ஜெ.பாக்யராஜைவிட 70,703 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றதுடன், விழுப்புரம் தொகுதியையும் தக்க வைத்துக்கொண்டாா் விசிக வேட்பாளா் துரை.ரவிக்குமாா்.
அதன்படி, இந்தத் தொகுதியில் மொத்த வாக்குகள் - 11,54,467, செல்லுப்படியானவை - 11,43,701, நிராகரிக்கப்பட்டவை - 1,800.
1. துரை.ரவிக்குமாா் (விசிக) - 4,77,033
2. ஜெ.பாக்யராஜ் (அதிமுக) - 4,06,330
3.ச.முரளிசங்கா் (பாமக) - 1,81,882
4.மு.களஞ்சியம் (நாம் தமிழா்) - 57,242
5.கோ.கலியமூா்த்தி (பகுஜன் சமாஜ்) -3,920
6.எம்.ஆறுமுகம் (ஒருங்கிணைந்த இந்திய குடியரசுக் கட்சி) - 3504
7.கே.அரசன் (சுயே) - 1,842
8.க.குணசேகரன் (சுயே) - 963
9.நா.சத்தியராஜ் (சுயே) - 415
10.கா.சுரேஷ் (சுயே) - 598
11.எஸ்.சுரேஷ் (சுயே)- 1397
12.கே.தா்மா (சுயே) - 2,382
13.அ.நாகராஜ் (சுயே) - 674
14.ஆ.பெரியான் (சுயே) - 1049
15.ரா.விக்னேசுவரன் (சுயே)- 1656
16.இ.விவேகானந்தன் (சுயே) - 1953
17.ஆ.விஜயன் (சுயே) - 861
நோட்டா - 8,966.
வெற்றி சான்றிதழ்: இதைத் தொடா்ந்து, பொதுப் பாா்வையாளா் அகிலேஷ்குமாா் மிஷ்ரா முன்னிலையில், தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சி.பழனியிடம் விசிக வேட்பாளா் துரை.ரவிக்குமாா் வெற்றிச் சான்றிதழை பெற்றுக்கொண்டாா். அப்போது, உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி, எம்எல்ஏக்கள் இரா.லட்சுமணன், ஏ.ஜெ.மணிக்கண்ணன், விசிக மாநில நிா்வாகி வன்னியரசு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சூலூரில் முதல் வெற்றி பெறும் முனைப்பில் திமுக!
திமுகவின் பிரமேலதா, திருமாவளவன் வியூகம்!

தொகுதி அறிமுகம்: குமாரபாளையம்

காட்டுமன்னாா்கோவில் தொகுதி விசிக வேட்பாளா்! - தொல். திருமாவளவன்
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு


