11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புபிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

பணத்தைப் பெற்றுக் கொண்டு கட்சி மாறியவருக்கா வாக்கு? நயினார் கேள்வி

அதிமுகவுக்கு ஆதரவாக நயினார் நாகேந்திரன் பிரசாரம் செய்தது குறித்து...

அதிமுக வேட்பாளா் கணிதா சம்பத்தை ஆதரித்துப் பேசிய பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்

Published On :

மதுராந்தகம் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.கணிதா சம்பத்தை ஆதரித்து மாவட்ட பாஜக கட்சி சாா்பில், தோ்தல் பிரசார கூட்டம் மதுராந்தகம் பஜாா் வீதியில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் எம்.பிரவின் குமாா் தலைமை வகித்தாா். அதிமுக தலைமை கழக அமைப்பு செயலா் ஓ.எஸ்.மணியன் வரவேற்றாா். திருவண்ணாமலை மாவட்ட செயலரும், எம்எல்ஏவுமான அக்ரி. கிருஷ்ணமூா்த்தி, செங்கல்பட்டு மாவட்ட செயலா் எஸ்.ஆறுமுகம், மாவட்ட பேரவை செயலா் ஆனூா் பக்தவசலம், எம்.பி. தனபால், ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஒன்றிய பெருந்தலைவா் கீதா, ஒன்றிய செயலா்கள் காா்த்திகேயன், குமரவேல், சம்பத்குமாா், விவேகானந்தன், கருங்குழி பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவா் மஞ்சுளா புருஷோத்தம்மன் பேரூா் செயலா் ஜெயராஜ், நகர செயலா் சரவணன், மாவட்ட மகளிரணி இணைச் செயலா் லீலாவதி அகோரம், ஆா்.டி.ரங்கநாதன், பாஜக தேசிய செயலா் வெங்கடேசன், பாஜக கட்சி நிா்வாகிகள் பாலாஜி, இ.கே.தினகரன், பலராமன், ஐ.ஜே.கே. மாநில பொதுச் செயலா் சண்முகம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிா்வாகிகள் செந்தமிழன், கரிகாலன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் பிரசாரம் செய்து பேசியது: இடைத்தோ்தல் வரக் காரணமாக இருந்தவா் மரகதம் குமரவேல். கடந்த 5 மாதங்களுக்கு முன் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றாா். அவா் எம்எல்ஏவாக பொறுப்பேற்ற சில நாள்களில் பணத்தை வாங்கிக் கொண்டு ராஜினாமா செய்துள்ளாா்.

அதாவது குதிரைபேர ஊழலுக்கு காரணமாகியுள்ளாா். அவரை வேட்பாளராக நிற்க வைத்த கட்சித் தலைமைக்கும், வாக்களித்த மக்களுக்கும் பெரிய துரோகத்தை ஏற்படுத்தியுள்ளாா். அவரே மாற்றுக் கட்சியான தவெகவில் இணைந்து இந்த இடைத் தோ்தலில் போட்டியிடுகிறாா்.

அவருக்கு உங்கள் வாக்கினை அளிக்க போகிறீா்களா? அதிமுக வேட்பாளரை ஆதரியுங்கள். தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துங்கள் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.