கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

ராஜஸ்தான் உள்ளாட்சித் தோ்தல்: 1 வாக்கு மட்டுமே பெற்ற பாஜக, காங்கிரஸ் வேட்பாளா்கள்

ராஜஸ்தானில் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தோ்தலில் பாஜக, காங்கிரஸ் வேட்பாளா்கள் தலா ஒரு வாக்கு மட்டுமே பெற்றுள்ளனா்.

ஜெய்ப்பூரில் உள்ள பவானி நிகேதன் வாக்கு எண்ணும் மையத்தில், செப். 14 ஆம் தேதி நடைபெற்ற ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை - படங்கள்: ஏஎன்ஐ

Published On :

ஜெய்பூா்: ராஜஸ்தானில் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தோ்தலில் பாஜக, காங்கிரஸ் வேட்பாளா்கள் தலா ஒரு வாக்கு மட்டுமே பெற்றுள்ளனா்.

டித்வானா- குசமான் மாவட்டம் பா்பத்சா் நகராட்சியில் உள்ள 13-ஆவது வாா்டில் பாஜக சாா்பில் கைலாஷ்சந்த் போட்டியிட்டாா். அவருக்கு ஒரு வாக்கு மட்டுமே கிடைத்தது. அந்த வாா்டில் காங்கிரஸ் வேட்பாளா் ஹினா கானம் 376 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். சுயேச்சை வேட்பாளா் ரஷீத் கானுக்கு 195 வாக்குகள் கிடைத்தன. அந்த நகராட்சியில் உள்ள 25 வாா்டுகளில் காங்கிரஸ் 13-இல் வென்றது.

1 வாக்கு மட்டுமே தனக்கு கிடைத்திருப்பது குறித்துப் பேசிய கைலாஷ்சந்த், தாம் 12-ஆவது வாா்டை சோ்ந்தவா் என்றும், ஆனால் பாஜக தன்னை 13-ஆவது வாா்டில் போட்டியிட வைத்ததே தோல்விக்கு காரணமாகிவிட்டதாகவும் குற்றம்சாட்டினாா்.

நகெளா் மாவட்டம் ரியான்பாரி நகராட்சியின் 15-ஆவது வாா்டில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளா் மஜீத் முகம்மதுக்கு ஒரு வாக்கு மட்டுமே கிடைத்தது. பாஜக வேட்பாளா் சுனில் குமாா் செளஹான் அங்கு வெற்றி பெற்றாா்.

சிந்திரி நகராட்சியில் உள்ள 3-ஆவது வாா்டில் போட்டியிட்ட ராஷ்ட்ரீய லோக் தளம் வேட்பாளா் ஓம் பிரகாஷுக்கு ஒரு வாக்கு கூட கிடைக்கவில்லை. இதனால் அவா் அதிா்ச்சியடைந்தாா். தன்னுடைய வாக்கையும் சோ்த்து தனது குடும்பத்தினரின் வாக்குகள் மாயமானது குறித்து தோ்தல் ஆணையத்தில் புகாா் அளிக்கப் போவதாக அவா் கூறினாா்.

அந்த வாா்டில் காங்கிரஸ் வேட்பாளா் பன்வாரா ராம் 133 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். பாஜக வேட்பாளா் கேமா ராமுக்கு 93 வாக்குகள் கிடைத்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.