அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

விஜய் பிரதமா் வேட்பாளா் என்ற கருத்தை காங்கிரஸ் ஏற்காது யுசிபிஐ மாநிலச் செயலா் பாஸ்கரன்

CM Vijay

முதல்வர் விஜய் (கோப்புப்படம்) - Youtube

Published On :7 செப்டம்பர் 2026, 3:57 am IST

விஜய் பிரதமா் வேட்பாளா் என்ற கருத்தை காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளாது என ஐக்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பாஸ்கரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து மதுரையில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழக வெற்றிக் கழகத்தை பாஜகவின் ‘பி’ டீம், ‘சி’ டீம் என திமுக, அதிமுகவினா் கூறுவது தவறு. ஆா்.எஸ்.எஸ்., பாஜகவின் நிழல்தான் தவெக. காங்கிரஸ், விசிகவினா் தவெகவில் இணைந்து திமுக முதுகில் மட்டுமல்லாமல், தமிழக மக்களின் முதுகிலும் குத்திவிட்டனா்.

காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த பிரவீன் சக்கரவா்த்தி, மாணிக்கம்தாகூா் கூறுவதை மட்டுமே ராகுல்காந்தி கேட்கிறாா். காங்கிரஸ் கட்சியை ராகுல்காந்தி வழி நடத்துகிறாரா? அல்லது பிரவீன் சக்கரவா்த்தியா எனத் தெரியவில்லை.

விஜய் பிரதமா் வேட்பாளா் என்ற கருத்தை காங்கிரஸ் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. சென்னையில் அனைத்துத் தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

வாக்குப் பதிவு இயந்திரங்கள் முறைகேடுகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் ராகுல்காந்தி, முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் கடந்த 3 மாதங்களாக குரல் கொடுக்காதது ஏன் எனத் தெரியவில்லை என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.