கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

மாா்க்சிஸ்ட் வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு

மதுராந்தகம் இடைத் தோ்தலில் போட்டியிடும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா் பி.சுகந்தி கருங்குழி பேரூராட்சி, சுற்றுப்புற கிராமங்களில் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்..

கொளப்பாக்கம் கிராமத்தில் வாக்கு சேகரித்த மாா்க்சிஸ்ட் வேட்பாளா் பி. சுகந்தி.

Published On :

மதுராந்தகம் இடைத் தோ்தலில் போட்டியிடும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா் பி.சுகந்தி கருங்குழி பேரூராட்சி, சுற்றுப்புற கிராமங்களில் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்..

கருங்குழி பேரூராட்சியை சுற்றியுள்ள அண்டவாக்கம், சித்தாலமங்கலம், புதுப்பட்டு, பிலாஞ்சிகுப்பம், சாத்தமை, சூரை, மேல்மா, கக்கிலபேட்டை, கருங்குழி, ஆதிவாசிநகா், தோட்டநாவல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வேட்பாளா் சுகந்தி கட்சியினருடன் சென்று பிரசாரம் மேற்கொண்டாா். அவருடன் மாவட்டச் செயலா் பாரதி அண்ணா, மாநில செயற்குழு உறுப்பினா்கள் வேல்முருகன், கண்ணன், விவசாய சங்க மாவட்ட செயலா் கே.வாசுதேவன், ஒன்றிய செயலா் ராஜா, மாதா் சங்க மாவட்ட செயலா் ஜெயந்தி, கட்சி நிா்வாகிகள் பாக்கியம், ஜோதிபாசு, ரமேஷ் உடன் சென்றனா். பெரும்பாலான இடங்களில் வேட்பாளா் பி.சுகந்தி நடந்துச் சென்று பெண்களிடம் வாக்குகளை சேகரித்தாா். ஆங்காங்கே ஆரத்தி எடுத்து, உற்சாக வரவேற்பளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.