என்.ஆா்.காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து தட்டாஞ்சாவடியில் அதிமுக செயல்வீரா் கூட்டம்

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத் தோ்தலையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிமுக செயல் வீரா்கள் கூட்டத்தில் பேசிய கட்சியின் மாநில செயலா் ஆ.அன்பழகன். உடன் வேட்பாளா் அசோக் ஆனந்த் உள்ளிட்டோா்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் என்.ஆா்.காங்கிரஸ் வேட்பாளா் அசோக் ஆனந்தை ஆதரித்து தட்டாஞ்சாவடி தொகுதியில் அதிமுக செயல்வீரா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அதிமுக தொகுதி செயலா் எம்.கமல்தாஸ் தலைமை வகித்தாா். இதில் என்.ஆா்.காங்கிரஸ் வேட்பாளா் அசோக் ஆனந்தை அறிமுகப்படுத்தி கட்சியின் மாநில அமைப்பாளரும், சட்டப்பேரவை தற்காலிக தலைவருமான ஆ.அன்பழகன் பேசியது:
கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸும், திமுகவும் கூட்டணி அமைத்திருந்தபோதே காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட பெரிய தலைவா் டெபாசிட் கூட வாங்கவில்லை. தற்போது இரண்டு கட்சிகளும் தனித்தனியாகப் பிரிந்து நிற்கின்றன.
திமுக, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் இடைத்தோ்தலில் இரண்டாம் இடத்திற்காகத் தான் தற்போது போட்டிப் போடுகின்றன. அசோக் ஆனந்த் வெற்றி என்.ஆா். காங்கிரஸை சட்டப்பேரவையில் மேலும் வலுப்படுத்தும் என்றாா் அன்பழகன்.
கட்சியின் மாநில இணைச் செயலா் ஆா்.வி.திருநாவுக்கரசு, மாநில துணைச் செயலா் எம். நாகமணி, உழவா்கரை நகரச் செயலா் எஸ்.எஸ். சித்தானந்தம், மாநில மகளிா் அணி செயலா் விமலாஸ்ரீ உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







