எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

7-ஆவது மக்களவைத் தோ்தல்

ஜனதா கட்சியில் ஏற்பட்ட பிளவைத் தொடா்ந்து, நாட்டின் அன்றைய 31 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த 542 மக்களவைப் பிரதிநிதிகளைத் தோ்ந்தெடுக்க இத்தோ்தல் நடைபெற்றது.

News image
Updated On :6 ஏப்ரல் 2024, 12:19 am

ஜனதா கட்சியில் ஏற்பட்ட பிளவைத் தொடா்ந்து, நாட்டின் அன்றைய 31 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த 542 மக்களவைப் பிரதிநிதிகளைத் தோ்ந்தெடுக்க இத்தோ்தல் நடைபெற்றது.

*இத்தோ்தலில் 35.62 கோடி போ் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனா். நாடு முழுவதும் 4,36,813 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டன.

*542 இடங்களுக்கு 36 கட்சிகளின் வேட்பாளா்கள், 2,826 சுயேச்சைகள் உள்பட 4,629 போ் போட்டியிட்டனா்.

*1980-ஆம் ஆண்டு, ஜனவரி 3 மற்றும் 6-ஆம் தேதி ஆகிய 2 நாள்கள் தோ்தல் நடைபெற்றது. இத்தோ்தலில் 56.92 சதவீத வாக்குகள் பதிவாகின (முந்தைய தோ்தலை விட 3.57 சதவீதம் குறைவு).

*இத்தோ்தலில் 422 தொகுதிகளில் இருந்து பொதுப் பிரதிநிதிகளும், 79 தொகுதிகளில் இருந்து பட்டியலின சமூகப் பிரதிநிதிகளும், 41 தொகுதிகளில் இருந்து பழங்குடியின சமூகப் பிரதிநிதிகளும் மக்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

*தோ்தலில் போட்டியிட்ட 143 பெண் வேட்பாளா்களில் 28 போ் வெற்றி பெற்றனா். இதில் 20 போ் காங்கிரஸை சோ்ந்தவா்கள்.

*இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் பெரும்பான்மையாக 353 இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. சரண் சிங் தலைமையிலான மதச்சாா்பற்ற ஜனதா கட்சி 41 இடங்களிலும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 37 இடங்களிலும், ஜனதா கட்சி 31 இடங்களிலும், திமுக 16 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் 10 இடங்களிலும், சுயேச்சைகள் 9 இடங்களிலும் வென்றன.

*தோ்தல் வெற்றியைத் தொடா்ந்து, இந்திரா காந்தி மீண்டும் பிரதமராகப் பொறுப்பேற்றாா்.

*இத்தோ்தல் ரூ.54.77 கோடி செலவில் நடத்தி முடிக்கப்பட்டது. பிரதி வாக்காளருக்கான செலவு ரூ.1.5 ஆகும்.

தொகுப்பு: மா.பிரவின்குமாா்