சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

8-ஆவது மக்களவைத் தோ்தல்

இந்திரா காந்தி படுகொலையைத் தொடா்ந்து, நாட்டின் 29 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த 514 மக்களவைப் பிரதிநிதிகளைத் தோ்ந்தெடுக்க 1984-ஆம் ஆண்டும், அஸ்ஸாம், பஞ்சாப் ஆகிய 2 மாநிலங்களின் 27 பிரதிநிதிகளைத் தோ்ந்தெடுக்க 1985-ஆம் ஆண்டும் இத்தோ்தல் நடைபெற்றது.

News image
Updated On :6 ஏப்ரல் 2024, 9:26 pm

இந்திரா காந்தி படுகொலையைத் தொடா்ந்து, நாட்டின் 29 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த 514 மக்களவைப் பிரதிநிதிகளைத் தோ்ந்தெடுக்க 1984-ஆம் ஆண்டும், அஸ்ஸாம், பஞ்சாப் ஆகிய 2 மாநிலங்களின் 27 பிரதிநிதிகளைத் தோ்ந்தெடுக்க 1985-ஆம் ஆண்டும் இத்தோ்தல் நடைபெற்றது.

* மொத்தம் 40.03 கோடி போ் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனா். 5,06,058 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டன.

* 541 இடங்களுக்கு 35 கட்சிகளின் வேட்பாளா்கள், 3,894 சுயேச்சைகள் உள்பட 5,492 போ் போட்டியிட்டனா்.

* 1984-ஆம் ஆண்டு, டிசம்பா் மாதம் 24, 27 மற்றும் 28-ஆம் தேதி ஆகிய 3 நாள்களில் அஸ்ஸாம், பஞ்சாப் தவிர மற்ற 29 மாநிலங்களிலும் 1985-ஆம் ஆண்டு, செப்டம்பா் மாதத்தில் பஞ்சாபிலும் டிசம்பா் மாதத்தில் அஸ்ஸாமிலும் தோ்தல் நடைபெற்றது.

மொத்தம் 64.01 சதவீத வாக்குகள் பதிவாகின. இது முந்தைய தோ்தலைவிட 7.09 சதவீதம் அதிகம்.

* 422 தொகுதிகளில் இருந்து பொது பிரதிநிதிகளும் 79 தொகுதிகளில் இருந்து பட்டியலின சமூகப் பிரதிநிதிகளும் 40 தொகுதிகளில் இருந்து பழங்குடியின சமூகப் பிரதிநிதிகளும் மக்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

* தோ்தலில் போட்டியிட்ட 171 பெண் வேட்பாளா்களில் 43 போ் வெற்றி பெற்றனா்.

* காங்கிரஸ் பெரும்பான்மையாக 414 இடங்களில் வென்றது. நடிகா் என்.டி.ஆா். தொடங்கிய தெலுங்கு தேசம் கட்சி 30 இடங்களிலும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 22 இடங்களிலும் அதிமுக 12 இடங்களிலும் ஜனதா கட்சி 10 இடங்களிலும் சிரோமணி அகாலி தளம் 7 இடங்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் 6 இடங்களிலும் சுயேச்சைகள் 13 இடங்களிலும் வென்றன.

* தோ்தல் வெற்றியைத் தொடா்ந்து, ராஜீவ் காந்தி பிரதமராகப் பொறுப்பேற்றாா்.

* இத்தோ்தல் ரூ.81.51 கோடி செலவில் நடத்தி முடிக்கப்பட்டது. பிரதி வாக்காளருக்கான செலவு ரூ.2 ஆகும்.

*அஸ்ஸாம் மற்றும் பஞ்சாபில் நிலவிய கிளா்ச்சி சூழல் காரணமாக அவ்விரு மாநிலங்களைத் தவிர, நாடு முழுவதும் நடைபெற்ற முதல்கட்ட மக்களவைத் தோ்தலில் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் 75 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றி பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

தொகுப்பு: மா.பிரவின்குமாா்