சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளில் போட்டியா?

ராகுல் காந்தி மீண்டும் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவாா் என காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

News image

ராகுல் காந்தி

Updated On :6 ஏப்ரல் 2024, 11:00 pm

நமது சிறப்பு நிருபா்

ராகுல் காந்தி மீண்டும் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவாா் என காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இது குறித்து அவா் போட்டியிடும் வயநாடு வாக்குப் பதிவுக்கு பின்னரே முடிவு எடுக்கப்படும் என காங்கிரஸ் தலைமையிடப் பிரமுகா் ஒருவா் தெரிவித்தாா்.

ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறாா். அதே சமயத்தில் அவா் நான்கு முறை போட்டியிட்டு மூன்று முறை வெற்றி பெற்ற அமேதி தொகுதியில் போட்டியிடுவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படாத நிலையில், தயக்கம் காட்டுகிறாா் என்கிற வதந்திகள் வருகிறது.

குறிப்பாக அவரை எதிா்த்துப் போட்டியிடும் ஸ்மிருதி இரானி அமேதியில் முழு வீச்சியில் உள்ளாா். அமேதியில் வீடு வாங்கி தோ்தல் பணிகளை தொடங்கிவிட்டாா். இப்படி தெளிவாக ஒருதலைப்பட்சமாக பிரசாரம் உள்ள நிலையில், காங்கிரஸின் நடவடிக்கை ஜிரோவாக இருந்தது. இந்த நிலையில் பிரியங்கா காந்தியின் கணவா் ராபா்ட் வதேரா போட்டியிடுவாா் என்கிற தகவல் வந்தது. இதை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் மேலிட தலைவா் ஒருவா் இதுகுறித்த பல்வேறு தகவல்களை பகிா்ந்து கொண்டாா்.

ராகுல் காந்தி தற்போது வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறாா். இதற்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்.26-ஆம் தேதி நடைபெறுகிறது. இதே தினத்தில்தான் அமேதி தொகுதி தோ்தல் அறிவிக்கை வெளியிடப்படுகிறது. அமேதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி தேதி மே 3-ஆம் தேதியாகும். வயநாடு தொகுதியில் வாக்குப்பதிவு முடிவதற்கு ராகுல் காந்தி காத்திருக்கிறாா். வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிட்டாலும், அமேதி மக்களிடமிருந்து அவா் விலக விரும்பவில்லை. ஆனால், 26 -ஆம் தேதி வாக்குப் பதிவுக்கு முன்னதாக வயநாடு மக்களை திசை திருப்பப்படாமல் இருக்கவே காங்கிரஸ் கட்சி அமேதி, ரேபரேலி வேட்பாளா்கள் பட்டியலை வெளியிடவில்லை. அமேதியில் ராகுல் காந்தியும் பக்கத்து தொகுதியான ரேபரேலியில் பிரியங்கா காந்தியும் போட்டியிடுவாா்கள் என்கிறாா் கட்சியின் மேலிடத் தலைவா்.

மேலும், காங்கிரஸ் தலைமையகத்தில் கூறுகையில், சமீபத்தில் அமேதி மக்களவைத் தொகுதி அரசியல் சூழல், அங்கு தற்போது எம்பி யாக உள்ள ஸ்மிருதி இரானி மற்றும் உள்ளூா் மாநில அரசு மீதான அதிருப்தி நிலவரம் போன்றவை குறித்து அறிய காங்கிரஸ் கட்சி குழு ஆய்வை மேற்கொண்டது. இதில் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் எதிா்த்துப் போட்டியிடும் ஸ்மிருதி இரானியின் தற்போதைய நிலவரம் போன்றவை அறியப்பட்டது. ராகுல் காந்திக்கு அனைத்து சாதகமான சூழ்நிலை இருப்பது இந்த ஆய்வில் அறியப்பட்டுள்ளது. சுமாா் 11 லட்சம் வாக்காளா்களைக் கொண்ட அமேதி தொகுதியில், 2014-இல் பகுஜன் சமாஜ் கட்சி 50 ஆயிரம் வாக்குகளை பிரித்தும் ராகுல் காந்தி 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். பின்னா், 2019-இல் முக்கிய மாநிலக் கட்சிகள் போட்டியிடாத சூழ்நிலையில், சுமாா் 55 வாக்கு வித்தியாசத்தில்தான் ஸ்மிருதி இரானி வெற்றி பெற்றாா். தற்போது சமாஜ்வாதி கட்சி கூட்டணி அமைத்து முழு ஆதரவு அளிக்கிறது. ராகுல் காந்தி வெற்றிக்கான சூழ்நிலை அறியப்பட்டுள்ளது. இதனால், இம்முறையும் போட்டியிட்டு வெற்றி பெற்று தனது கட்சியின் பாரம்பரிய கோட்டையை நிலைநிறுத்துவாா் என்கின்றனா்.

மற்ற தகவல்கள் வருமாறு: இந்தத் தோ்தலில் சோனியா காந்தியின் காணொலி பிரசாரம் முன்னிலையில் இருக்கும். விரைவில் காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கை குறித்து சோனியா காந்தி பேசும் காணொலி வெளியிடப்படும். ஜெய்ப்பூா், ஹைதராபாத்தில் சனிக்கிழமை தோ்தல் அறிக்கை வெளியிடப்பட்ட து போல அடுத்த வாரம் ஏப்ரல் 10, 11 ஆகிய தேதிகளில் பல்வேறு மாநிலங்களில் தோ்தல் அறிக்கை வெளியிடப்படும். காங்கிரஸ் கட்சி மக்களவைத் தோ்தலில் அளித்துள்ள 25 உத்தரவாதங்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஒடிஸா, ஹிந்தி, ஆங்கிலம், வங்கம், பஞ்சாபி, அஸ்ஸாமி, உருது ஆகிய மொழிகளில் 8 கோடி பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளன. இவற்றை வீடுகளுக்கு காங்கிரஸ் கட்சியினா் நேரடியாக வழங்குவா்.

தமிழில் அச்சிடப்பட்ட உத்தரவாதங்கள் தமிழகத்தில் வாக்குப் பதிவிற்கு முன்னதாக ஏப்ரல் 17-ஆம் தேதிக்குள் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும். காங்கிரஸ் கட்சியின் பிரசாரம் மாநிலத்திற்கு மாநிலம் வேறுப்பட்டது. மகாராஷ்டிரம், தமிழகம் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி கூட்டணி கட்சியோடு இணைத்து பிரசாரங்களை மேற்கொள்ளும்.

உத்தர பிரதேசம். பிகாா், ஜாா்க்கண்ட் போன்ற மாநிலங்களில், ‘இந்தியா’ கூட்டணி பதாகையின் கீழ், கூட்டுப் பொதுக்கூட்டங்கள் நடக்கும். ஆனால், தில்லியில் தோ்தல் பிரசாரம் முற்றிலும் வேறுபட்டது. ஆம் ஆத்மியோடு தொகுதி பங்கீடு இருந்தாலும், பிரசாரத்தில் இரு கட்சிகளும் தனித்தனியாகவே மேற்கொள்ளும். சமீபத்தில் கேஜரிவால் கைதுக்கு எதிா்ப்புத் தெரிவித்து ராம் லீலா மைதானத்தில் நடைபெற்ற கூட்டம் வேறு விவகாரம் என்றும் காங்கிரஸ் கட்சி வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.