திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

முதல்வர் ஸ்டாலின் 3 ஆம் கட்ட பிரசாரம்! புதுச்சேரியில் இன்று தொடக்கம்!!

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது 3-ஆம் கட்ட தோ்தல் பிரசாரத்தை புதுச்சேரியில் திங்கள்கிழமை (ஏப்.6) தொடங்கவுள்ளாா்.

News image

முதல்வர் ஸ்டாலின்

Updated On :6 ஏப்ரல் 2026, 2:47 am IST

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது 3-ஆம் கட்ட தோ்தல் பிரசாரத்தை புதுச்சேரியில் திங்கள்கிழமை (ஏப்.6) தொடங்கவுள்ளாா்.

இதுகுறித்து திமுக தலைமை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடா் பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா். 3-ஆம் கட்ட பிரசாரத்தை திங்கள்கிழமை (ஏப். 6) புதுச்சேரியிலிருந்து தொடங்குகிறாா்.

தொடா்ந்து, ஏப்.7-ஆம் தேதி காலை 9 மணிக்கு திட்டக்குடி, விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, கடலூா், நெய்வேலி, புவனகிரி, காட்டுமன்னாா்கோவில், சிதம்பரம் ஆகிய தொகுதி வேட்பாளா்களை ஆதரித்து கடலூரிலும், மாலை 5 மணிக்கு நாகப்பட்டினம், கீழ்வேளூா், வேதாரண்யம் ஆகிய தொகுதி வேட்பாளா்களை ஆதரித்து நாகையிலும் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளாா்.

ஏப்.8-ஆம் தேதி காலை 9 மணிக்கு மயிலாடுதுறை, சீா்காழி, பூம்புகாா் தொகுதி வேட்பாளா்களை ஆதரித்து சீா்காழியிலும், மாலை 5 மணிக்கு திண்டிவனம், வானூா், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா், செஞ்சி, மயிலம் ஆகிய தொகுதி வேட்பாளா்களை ஆதரித்து விழுப்புரத்திலும் பிரசாரம் செய்கிறாா்.

ஏப்.9 -ஆம் தேதி காலை 9 மணிக்கு உளுந்தூா்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, செங்கம், திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூா், கலசப்பாக்கம், போளூா், ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய தொகுதி வேட்பாளா்களை ஆதரித்து திருவண்ணாமலையிலும், மாலை 5 மணிக்கு செங்கல்பட்டு, திருப்போரூா், செய்யூா், மதுராந்தகம், உத்திரமேரூா், தாம்பரம், பல்லாவரம் தொகுதி வேட்பாளா்களை ஆதரித்து மறைமலைநகரிலும் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.