சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக பெரம்பூர் தொகுதியில் 49 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கடந்த மார்ச் 30 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அனுமதிக்கப்பட்ட நான்கு நாள்களில் மொத்தம் 7,599 மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
தமிழகம் முழுவதும் தாக்கலான வேட்புமனுக்கள் நேற்று (ஏப். 7) பரிசீலனை செய்யப்பட்டன. அதில், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, தவெக தலைவர் விஜய், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரின் மனுக் கள் உள்பட 4,994 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. நள்ளிரவு நிலவரப்படி பல்வேறு காரணங்களால் 2458 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
சென்னை மாவட்டத்தைப் பொருத்தவரையில், மொத்தமுள்ள 16 தொகுதிகளில் 628 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. பரிசீலனைக்குப் பின்னர், 443 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. இதில், 176 பேரின் பிரமாணப் பத்திரத்தில் பிழைகள், குறைபாடுகளால் நிராகரிக்கப்பட்டன.
சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் அவருடன் சேர்த்து மொத்தமாக 49 பேர் களம்காண்கின்றனர்.
சென்னை மாவட்டத்தில் குறைந்தபட்சமாக எழும்பூர் (தனி) தொகுதியில் 19 பேர் போட்டியிடுகின்றனர்.
சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களான திருவள்ளூரில் 171 மனுக்களும், செங்கல்பட்டில் 238 மனுக்களும், காஞ்சிபுரத்தில் 125 மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன.
வேட்புமனுக்களை சமர்ப்பித்தவர்கள் தங்கள் மனுக்களைத் திரும்பப் பெற இன்றும், நாளையும் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், மொத்த வேட்பாளர்கள் விவரம் உள்ளிட்டவை நாளை மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
48 Candidates fray Against Vijay in Perambur. 443 nominations cleared in 16 Chennai seats; Perambur tops with 49 candidates in fray
இதையும் படிக்க... பெரம்பூர் வேட்பாளர் பட்டியலில் 2 விஜய், 2 ஜோசப்! பழைய டெக்னிக் உதவுமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பென்னாகரத்தில் 6 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு
குமரி மாவட்டத்தில் 90 மனுக்கள் ஏற்பு
திருப்பத்தூா்: 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 83 மனுக்கள் ஏற்பு; 47 மனுக்கள் நிராகரிப்பு

பெரம்பூர் தொகுதியில் ஆர்.டி. சேகர் மீண்டும் போட்டி
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

