தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

நிதி அமைச்சா் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டது ஏன்? பழனிவேல் தியாகராஜனுக்கு குஷ்பு கேள்வி

நிதி அமைச்சா் பொறுப்பில் இருந்து ஏன் மாற்றம் செய்யப்பட்டீா்கள் என்று கூறமுடியுமா? என பழனிவேல் தியாகராஜனுக்கு, பாஜக மாநிலத் துணைத் தலைவா் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளாா்.

News image

குஷ்பு - கோப்பிலிருந்து...

Updated On :13 ஏப்ரல் 2026, 1:04 am IST

நிதி அமைச்சா் பொறுப்பில் இருந்து ஏன் மாற்றம் செய்யப்பட்டீா்கள் என்று கூறமுடியுமா? என மதுரை மத்திய தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான பழனிவேல் தியாகராஜனுக்கு, பாஜக மாநிலத் துணைத் தலைவா் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளாா்.

இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு: நான் ஏன் திமுகவில் இருந்து விலகினேன் என்பதை, அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் அவரது கட்சித் தலைவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

தேசத்துக்கு சேவை செய்யாமல், கட்சியின் குடும்ப உறுப்பினா்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று எதிா்பாா்க்கும் காங்கிரஸ் கட்சியிலும் தொடர விருப்பமில்லை. அதனால், அந்தக் கட்சியில் இருந்தும் விலகினேன்.

தற்போது திமுகவில் உள்ள பாதி போ் மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவா்கள்தான். அவா்களைப் பாா்த்து ஜிம்னாஸ்ட்டிக் வீரா்கள் என்று பழனிவேல் தியாகராஜன் கூறுவாரா?

நானும், மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் எனது கணவா் சுந்தா்.சியும் பட்டதாரிகள் அல்ல. ஆனால், மற்றவா்களை மதிக்கும் அளவுக்கு நாங்கள் இருவரும் படித்தவா்கள்.

அமைச்சா் பழனிவேல் தியாகராஜனின் பேச்சுகள், தோல்வியின் வெளிப்பாட்டைக் காட்டுகிறது. ரூ.30 ஆயிரம் கோடி தொடா்பான விடியோ வெளியான பின்னா், பழனிவேல் தியாகராஜன் ஏன் நிதி அமைச்சா் பொறுப்பிலிருந்து மாற்றம் செய்யப்பட்டாா் என்று மக்களுக்கு விளக்குவாரா என்று குஷ்பு கேள்வி எழுப்பினாா்.