உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

26 வயது இளம் வேட்பாளருக்கு வாய்ப்பு கொடுத்த திமுக!

திமுக-வின் இளம் வயது வேட்பாளராக அவிநாசி தொகுதியில் கோகிலாமணி அறிவிக்கப்பட்டுள்ளார்.

News image

அவிநாசி தொகுதி வேட்பாளர் கோகிலாமணி - X

Updated On :28 மார்ச் 2026, 9:57 pm IST

திமுக அறிவித்துள்ள வேட்பாளர் பட்டியலில் இளம் வயது வேட்பாளராக அவிநாசி தொகுதியில் மருத்துவர் கோகிலாமணி அறிவிக்கப்பட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியலை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

164 தொகுதிகளில் திமுக நேரடியாகக் களமிறங்குகிறது. 11 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன.

திமுக வேட்பாளர் பட்டியலில் இளம் வயது வேட்பாளராக கோகிலாமணி (26), அவிநாசி (தனி) தொகுதியில் போட்டியிடுகின்றார். திமுக வேட்பாளர்களில் இவரே குறைந்த வயதுள்ளவர்.

எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பு படித்துள்ள கோகிலாமணி, மூன்று ஆண்டுகள் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி, பின்னர் கடந்தாண்டு ஆகஸ்ட் முதல் அவிநாசி வட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலைய அரசு மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் முதல் முறையாகத் தேர்தலில் போட்டியிடுகின்றார்.

அவிநாசி (தனி) தொகுதியில் கடந்த 1996-க்குப் பிறகு நடைபெற்ற எந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக வெற்றிபெறவில்லை. 2001, 2006, 2011, 2016, 2021 எனத் தொடர்ந்து 5 முறையாக இந்தத் தொகுதி அதிமுக-வின் வசமுள்ளது.

இந்தத் தொகுதியில் அதிமுக சட்டப்பேரவைத் தலைவராக இருந்த ப.தனபால் கடந்த இரு சட்டப்பேரவைத் தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று எம்.எல்.ஏ.-ஆக உள்ளார்.

இதில், கடந்த 2016 -ம் ஆண்டுத் தேர்தலில் 30,674 வாக்குகள் வித்தியாசத்திலும் 2021 -ம் ஆண்டு தேர்தலில் 50,902 வாக்குகள் வித்தியாசத்திலும் திமுக வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர்.

ஆனால், தற்போது நடைபெறவுள்ள 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அவிநாசி தொகுதியில் அதிமுகவுக்கு பதிலாக கூட்டணி கட்சியான பாஜக போட்டியிடுகின்றது.

எனவே, இந்தத் தொகுதி அதிமுகவின் வெற்றியைத் தக்கவைக்குமா அல்லது திமுகவின் இளம் வேட்பாளர் வசம் செல்லுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Summary

DMK Gives Opportunity to 26-Year-Old Young Candidate!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.