காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

ஆத்தூரில் 9 ஆவது முறையாக ஐ. பெரியசாமி போட்டி! தமிழகத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர்!

2021 தேர்தலில் ஆத்தூர் தொகுதியில் அமைச்சர் ஐ. பெரியசாமி சுமார் 1.36 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்...

Minister I. Periyasamy

அமைச்சர் ஐ. பெரியசாமி - (கோப்புப் படம்)

Published On :

திமுக சார்பில் ஆத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி 9 ஆவது முறையாகப் போட்டியிடுகிறார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23 அன்று நடைபெறுகிறது. திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விவரங்கள் சனிக்கிழமை (மார்ச் 28) வெளியிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, திமுக நேரடியாகப் போட்டியிடும் 164 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழகத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அமைச்சர் ஐ. பெரியசாமி மீண்டும் ஆத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

கடந்த 2021 தேர்தலில் திண்டுக்கல் மாவட்டத்தின் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் ஐ. பெரியசாமி 1,65,809 வாக்குகள் பெற்று, 1 லட்சத்து 35 ஆயிரத்து 571 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் திலகபாமா 30,238 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

முன்னதாக, கடந்த 1989 முதல் திமுக சார்பில் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வரும் அமைச்சர் ஐ. பெரியசாமி, 1991 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் மட்டும் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Rural Development Minister I. Periyasamy is contesting for the 9th time from the Athur constituency.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.