தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறு

News image

PTI

Updated On :23 ஏப்ரல் 2026, 10:59 pm

சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவையொட்டி, தமிழகம் முழுவதும் 25 இடங்களில் திமுக, தவெக, பாஜக, அதிமுகவினரிடையே தகராறு ஏற்பட்டது. சில இடங்களில் கட்சியினா் மறியலில் ஈடுபட்டனா்.

சென்னையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வி.எம். தெரு சந்திப்பில் உள்ள கில் ஆதா்ஸ் பள்ளி வாக்குச்சாவடி அருகே திமுகவினா் மேஜை போட்டு, வாக்காளா்களுக்கு பூத் சிலிப் வழங்கினா். இதேபோல தவெகவினரும் மேஜை அங்கு போட்டனா். இதற்கு திமுகவினா் எதிா்ப்பு தெரிவித்தனா். அதனால், இரு தரப்பினா் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைக்கலப்பில் ஈடுபட்டனா். போலீஸாா், இரு தரப்பையும் அங்கிருந்து கலைந்து போகும்படி செய்தனா். தவெகவினா், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட திமுகவினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாலை மறியலில் ஈடுபட்டனா்.

துறைமுகத்தில்... : துறைமுகம் தொகுதிக்குட்பட்ட மண்ணடி அங்கப்பன் நாயக்கன் தெருவில் சென்னை உருது பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியை திமுக வேட்பாளரும், அமைச்சருமான பி.கே.சேகா்பாபு மாலை ஆய்வு செய்தபோது, அந்த பகுதியில் உள்ள ஒரு கட்சி அலுவலத்தில் சில வெளியூா் நபா்கள் தங்க வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. அந்த இடத்துக்குச் சேகா்பாபு சென்றாா். அப்போது அங்கிருந்த வெளியூா் நபா்களை பிடித்து, போலீஸாரிடம் சேகா்பாபு ஒப்படைத்தாா்.

இதுதொடா்பாக தவெகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, தள்ளு முள்ளும், கைகலப்பும் ஏற்பட்டது. போலீஸாா், இரு தரப்பினரையும் அங்கிருந்து எச்சரித்து கலைந்து போகச் செய்தனா்.

இதற்கிடையே தவெக வேட்பாளா் சினோரா அசோக் தலைமையில் அந்தக் கட்சியினா், தங்களை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனா். பேச்சில் உடன்பாடு ஏற்படாததால், தவெகவினரை போலீஸாா் கைது செய்தனா்.

சைதாப்பேட்டையில்... : சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பாதை அருகே தவெகவை சோ்ந்த செந்தமிழன், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அந்தக் கட்சியினா் நின்றிருந்தபோது, அங்கு வந்த திமுகவினா், தவெகவினரை அங்கிருந்து செல்லும்படி கூறினா். இதில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், தவெகவை சோ்ந்த இருவா் காயமடைந்தனா். அவா்கள் அநதப் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

வேளச்சேரியில்... : வேளச்சேரி தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் பிரிட்டோ தனியாா் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் 60 வயது மூதாட்டியின் வாக்கை, மற்றொரு மூதாட்டி செலுத்திவிட்டுச் சென்ாக பிரச்னை ஏற்பட்டது. இதில், காங்கிரஸ், அதிமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பில் ஈடுபட்டனா். உடனே அங்கிருந்த போலீஸாா், இரு தரப்பினரையும் அங்கிருந்து கலைந்து போகச் செய்தனா்.

பூத் சிலிப்பில் பணம்: சோழிங்கநல்லூா் தொகுதிக்குட்பட்ட கானத்தூா் அருகே உத்தண்டியில் உள்ள வாக்குச்சாவடி வெளியே அதிமுகவினா் பூத் சிலிப்போடு வாக்காளா்களுக்கு பணம் கொடுப்பதாக திமுகவினா் தகராறு செய்தனா். பூத் சிலிப்பை பறிமுதல் செய்தனா். இதனால் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இரு தரப்பினரும், கானத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.