8 தொகுதிகளில் நேரடியாக மோதும் தேசியக் கட்சிகள் !
தமிழகத்தில் திமுக கூட்டணி , அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேசியக் கட்சிகள் 72 தொகுதிகளில் போட்டியிட்டாலும்கூட 8 தொகுதிகளில் மட்டுமே நேரடி சவாலை எதிர்கொள்கின்றன.


தமிழகத்தில் திமுக கூட்டணி , அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேசியக் கட்சிகள் 72 தொகுதிகளில் போட்டியிட்டாலும்கூட 8 தொகுதிகளில் மட்டுமே நேரடி சவாலை எதிர்கொள்கின்றன.
தமிழகத்தில் பிரதான கட்சியான திமுக கூட்டணியில் தேசியக் கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. மற்றொரு பிரதான கட்சியான அதிமுக கூட்டணியில் தேசியக் கட்சியான பாஜக இடம்பெற்றுள்ளது.
தேசியக் கட்சிகளுக்கு மொத்தம் 38 தொகுதிகளை ஒதுக்கீடு செய்து திமுக முன்னிலையில் உள்ளது. 28 தொகுதிகளில் காங்கிரஸ் களமிறங்குகிறது. அதிமுகவைப் பொருத்தவரை பாஜகவுக்கு 27 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும்கூட, அதன் கூட்டணியிலுள்ள தமாகா (5), தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் (1), புதிய நீதிக் கட்சி (1) வேட்பாளர்களும் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றனர். இதன்மூலம், தமிழகத்தில் அதிகபட்ச தொகுதிகளில் (34 இடங்கள்) போட்டியிடும் தேசியக் கட்சியின் சின்னமாக தாமரை முன்னிலை பெற்றிருக்கிறது.
அதே நேரத்தில், மொத்தமுள்ள 234 பேரவைத் தொகுதிகளில் 8 தொகுதிகளில் மட்டுமே தேசியக் கட்சிகளுக்கு இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இதில் உதகை, அறந்தாங்கி, விளவங்கோடு, கிள்ளியூர், குளச்சல் ஆகிய 5 தொகுதிகளில் பாஜக, காங்கிரஸ் சின்னங்கள் களம் காண்கின்றன. கிள்ளியூர் தொகுதியில் தமாகா வேட்பாளர் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு அடுத்தபடியாக பத்மநாதபுரம், கந்தர்வக்கோட்டை ஆகிய இரு தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் பாஜகவை எதிர்கொள்கின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தளி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட், பாஜக வேட்பாளர்கள் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
திமுக கூட்டணியில் காங்கிரஸýக்கு 5 தனித் தொகுதிகளும், அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தனித் தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனாலும், காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளுக்கு இடையே தனித் தொகுதியில் நேரடிப் போட்டி ஏற்படவில்லை. எனினும், கந்தர்வக்கோட்டை தனித் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக வேட்பாளர்கள் இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது.
-ஆ.நங்கையார்மணி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...