ஜனசங்கமாக இருந்த பாஜகவின் முதல் சின்னம் இதுதான்

வாக்காளர்களிடம் வேட்பாளர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள அவர்களது கட்சிப் பெயருடன், சின்னங்கள் அவசியமான ஒன்றாகிவிட்டன. 

அதனால்தான் ஏதேனும் காரணத்துக்காக சின்னங்களை தேர்தல் ஆணையம் முடக்க முயல்வதும், தேர்தல் சின்னத்தை இழப்பதால் வாக்கு வங்கியை இழக்கும் நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தேர்தல் ஆணையத்திடம் போராடி சின்னத்தை மீட்டெடுப்பதுமே கட்சிகளின் வாடிக்கை.

பாஜகவின் முன்னோடிக் கட்சி ஜனசங்கமாகும். 1951-ஆம் ஆண்டு பாரதிய ஜனசங்கம் தொடங்கியபோது அக்கட்சியின் சின்னமாக தீபம் (விளக்கு) சின்னம் இருந்தது.

இந்திரா காந்தியின் நெருக்கடி நிலைக்குப் பிறகு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஜனதா கட்சி உருவாகியது. அதில் ஜனசங்கம் இணைந்தது. பிறகு பிரிந்து, 1980-இல் மீண்டும் பாரதிய ஜனதா கட்சியாகப் புது அடையாளம் பெற்றது. அப்போது அக்கட்சி தாமரைச் சின்னத்தைப் பெற்றது. அன்று தொடங்கி இன்று வரை  தாமரை சின்னத்தை பாஜக தக்க வைத்துக் கொண்டுள்ளது.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com