மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வாக்குப்பதிவுக்கு 5 நாள்களுக்கு முன்பே வாக்காளர் தகவல் சீட்டு வழங்க ஏற்பாடு

வாக்குப்பதிவு நடைபெறும் நாளுக்கு ஐந்து நாள்களுக்கு முன்னரே வாக்காளர் தகவல் சீட்டு அனைத்து வாக்காளர்களுக்கும் வழங்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

News image
வாக்குப்பதிவுக்கு 5 நாள்களுக்கு முன்பே வாக்காளர் தகவல் சீட்டு வழங்க ஏற்பாடு
Updated On :11 மார்ச் 2021, 11:23 am

DIN


வாக்குப்பதிவு நடைபெறும் நாளுக்கு ஐந்து நாள்களுக்கு முன்னரே வாக்காளர் தகவல் சீட்டு அனைத்து வாக்காளர்களுக்கும் வழங்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், நடைபெறவிருக்கின்ற, 2021-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கான பொதுத் தேர்தலில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள அனைத்து வாக்காளர்களும், அவர்கள் வாக்களிப்பதற்கு முன்னர், வாக்குச்சாவடியில் தங்கள் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்கான வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்கவேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள், அவர்களின் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக, பின்வரும் மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனுமொன்றை காண்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது.

1. ஆதார் அட்டை
2. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை;
3. வங்கி / அஞ்சலக கணக்குப் புத்தகங்கள் (புகைப்படத்துடன் கூடிய) ;
(அ) தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை;
(ஆ) ஓட்டுநர் உரிமம்;
(இ) நிரந்தர கணக்கு எண் அட்டை (பான் அட்டை);
(ஈ) தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை;
(உ) இந்திய கடவுச்சீட்டு;
(ஊ) புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்
(எ) மத்திய / மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் / வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்,
(ஏ) பாராளுமன்ற/ சட்டமன்ற/ சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கபட்டுள்ள அலுவலக அடையாள அட்டை

மேலும், புகைப்பட வாக்காளர் சீட்டிற்குப் பதிலாக அனைத்து வாக்காளர்களின் வசதிக்காக வாக்காளர்களின் பெயர் இடம்பெற்றுள்ள வாக்குச்சாவடி மையம், வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் வரிசை எண், வாக்குப்பதிவு நாள், நேரம் போன்றவை இடம் பெற்றிருக்கும் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்படும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மூலம் வாக்குப்பதிவு நடைபெறும் நாளுக்கு ஐந்து நாட்களுக்கு முன்னரே வாக்காளர் தகவல் சீட்டு அனைத்து வாக்காளர்களுக்கும் வழங்கப்படும். எனினும், வாக்காளர் தகவல் சீட்டு வாக்காளரின் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்கான ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

ஒரு வாக்காளர் வேறொரு சட்ட மன்ற தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வைத்திருப்பாரேயானால் அந்த அடையாள அட்டையையும் இந்திய தேர்தல் ஆணையம் காட்டும் ஆவணமாகப் பயன்படுத்தலாம். ஆனால் அந்த வாக்காளருடைய பெயர் அந்த வாக்குச் சாவடிக்குரிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும். வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அல்லது இந்திய தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட மேற்கூறிய எந்த ஒரு அடையாள ஆவணம் வைத்திருப்பதால் மட்டுமே ஒரு வாக்காளர் தனது வாக்கைச் செலுத்திவிட முடியாது. 
அவருடைய பெயர் வாக்குச் சாவடிக்கு அனுப்பப்பட்ட வாக்காளார் பட்டியலில் இடம் பெற்றிருந்தால் மட்டுமே அவர் வாக்குரிமையைச் செலுத்த தகுதியுடையவர் ஆவார் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் அரசு முதன்மை செயலாளர் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.