மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை (ஏப்.25) சாலைவலம் மேற்கொண்டார்.
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்ட நிலையில், முதல்கட்டமாக ஏப்ரல் 23 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 29 அன்று நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தல் பிரசாரம் வரும் ஏப்ரல் 27 அன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற உள்ளது.
இதனிடையே, திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பிலும், தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக, பாஜகவின் முக்கிய தலைவர்களான பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்றோர் மக்களிடையே தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.
முன்னதாக, பாஜக பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, நேற்று (ஏப்ரல் 24) அங்குள்ள கங்கையின் கிளை நதியான ஹூக்ளி நதியில் படகுசவாரி செய்தார்.
இதனைத் தொடர்ந்து, ஹூக்ளி மாவட்டம், கோகாட் என்னும் பகுதியில் திரளான மக்களுக்கு நடுவில் சாலைவலம் மேற்கொண்ட ராஜ்நாத் சிங், “மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்போது, 'ஊடுருவல்காரர்கள்' வெளியேற்றப்படுவார்கள் மற்றும் 'குண்டர்கள்' சிறையில் அடைக்கப்படுவார்கள்" என்பதை வலியுறுத்திப் பேசினார்.
Summary
As election campaigning for the second phase of voting intensifies in West Bengal, the Union Defence Minister conducted a roadshow on Saturday (April 25).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல் 2026! விறுவிறுப்பான வாக்குப்பதிவு

3 நாள் பயணமாக ஜெர்மனி செல்லும் ராஜ்நாத் சிங்!

மேற்கு வங்கத்தை பாகிஸ்தான் குறிவைத்தால்... ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

மேற்கு வங்கத்தில் 4,660 துணை வாக்குச்சாவடிகளுக்கு ஒப்புதல்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை



