மருது சகோதரர்களுக்கு வீரவணக்கம்: முதல்வர் விஜய்சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்வு!கனமழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!கனமழை: நீலகிரியில் 6 தாலுகாக்களில் இன்று (அக். 24) பள்ளிகளுக்கு விடுமுறை!தமிழகத்தில் இரு நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை! அக். 26-இல் புயல் உருவாக வாய்ப்பு!கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 9,000 கோடி திரட்டுகிறது தமிழக அரசு!அருணாசல் எல்லையில் ரோந்துப் பாதைகளை சீன படைகள் பின்பற்றாததால் பதற்றம்: இந்தியாபாகிஸ்தானில் இந்திய ஆதரவு பயங்கரவாதத்தை ஒழிப்போம்! ராணுவ தலைமைத் தளபதி முனீா்!ரூ. 84,084 கோடிக்கு ‘சமுத்ர மந்தன்’ திட்டம்: கடலுக்கு அடியில் எண்ணெய், எரிவாயு தேட வழிகாட்டுதல்கள் வெளியீடு

புதுக்கோட்டை செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பணி: செப்.23-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

புதுக்கோட்டை மாவட்டம் செய்தி-மக்கள் தொடர்பு அலுவலகத்தில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்களிடமிருந்து செப்.23 -ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On :

புதுக்கோட்டை மாவட்டம் செய்தி-மக்கள் தொடர்பு அலுவலகத்தில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்களிடமிருந்து செப்.23 -ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: வாகன சீராளர்

காலியிடங்கள்: 01

தகுதி: வாகனங்களை சுத்தம் செய்வதிலும், பராமரித்தலிலும் போதிய அறிவு பெற்றிருத்தல் வேண்டும்  8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 1.7.2015 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: மின் உதவியாளர்

காலியிடங்கள்: 01

வயதுவரம்பு: 1.8.2015 தேதியின்படி 18 - 28க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்புத்தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்து 3 ஆண்டுகள் பணி அனுபவத்துடன் ஜெனரேட்டர் இயக்கத்தெரிந்தவராகவும் இருக்க வேண்டும்.

பணி: தொழில்நுட்ப உதவியாளர்

காலியிடங்கள்: 01

வயதுவரம்பு: 1.8.2015 தேதின்படி 18 - 28க்குள் இருக்க வேண்டும்,

தகுதி: டிப்ளமோவில் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் அல்லது எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பிரிவில் தேர்ச்சி பெற்று 2 ஆண்டுகள் பணி அனுபவமும், எல்சிடி திரையுடன் கூடிய கணினி ஹார்டுவேர் அனுபவமும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரரின் பெயர், விலாசம், பிறந்த தேதி, கல்வி அனுபவத் தகுதி மற்றும் பிற விவரங்களுடன் கூடிய முழுமையான விண்ணப்பபடிவத்தினை கையொப்பமிட்டு சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவிலான இரு புகைப்படங்கள் மற்றும் சான்றிதழ்களின் நகல்களுடன் புதுகை மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலரை வரும் 23.9.2015 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என  மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.