நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வேலைவாய்ப்புகளை அள்ளித் தரும் தொல்லியல் துறை!

தொல்லியல் துறையில் பல்வேறு பணிவாய்ப்புகள் உள்ளன. இப்பணி வாய்ப்புகளைப் பெறுவதற்குப் பலர் ஆர்வம் கொண்டிருந்தாலும் இத்துறையில் உள்ள கடுமையான வேலைகளால்

News image
Updated On :23 பிப்ரவரி 2016, 7:00 pm

பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்

தொல்லியல் துறையில் பல்வேறு பணிவாய்ப்புகள் உள்ளன. இப்பணி வாய்ப்புகளைப் பெறுவதற்குப் பலர் ஆர்வம் கொண்டிருந்தாலும் இத்துறையில் உள்ள கடுமையான வேலைகளால் இத்துறையில் நுழைவதற்குப் பலர், தயங்குகின்றனர். இருப்பினும் உண்மையிலேயே ஆர்வம் கொண்டுள்ளோர் பலர், இத்துறையில் பணி பெற்றுச் சாதிக்க வேண்டும் என்று நுழைகின்றனர்.

தொல்லியல்துறைப் பணிகள்
தொல்லியல் துறையில் தொன்மையான இடங்களை ஆய்வு செய்வது, கடந்த காலங்களில் எழுத்தில், வடிவத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஆராய்வது, வரலாற்றுக் காலங்களை ஆராய்வது, பல்வேறிடங்களில் கிடைக்கக் கூடிய நாணயங்கள், எலும்புகள், மண்பாண்டங்கள், அகழிகள், முதியோர் தாழிகள், கல்வெட்டுகள், மன்னர்கள் பயன்படுத்திய பொருள்கள் என்று பல்வேறு நிலைகளை ஆய்வு செய்வது இத்துறையின் முக்கியப் பணிகளாகும்.

தொல்லியல் என்பது கடந்த காலங்களைப் படிப்பது, நிகழ்வுகளை ஆராய்வது, கடந்த கால மக்களின் வாழ்வில் கிடைத்திருக்கும் ஆவணங்களைக் கொண்டு ஆராய்வது, ஆய்வின் மூலம் கண்டறிந்தவற்றை வைத்து ஏன் அவ்வாறு நிகழ்ந்தன என்று கண்டறிவது, சமூக பண்பாடு, வரலாறுகளைக் கண்டறிவது ஆகியவை இத்துறை சார்ந்த பணிகளாகும்.

பல்வேறு பணிகளான புவியல் ஆய்வு, பூமியைத் தோண்டி தொல் பொருள்களைக் கண்டறிதல், ஆய்விற்காக சேகரிக்கப்பட்ட பொருள்களை அதற்கான ஆய்வகத்தில் சோதித்தல், தொல் பொருள்கள் குறித்த ஆலோசனைகளை வழங்குதல், முக்கியமான பழைமையான கட்டடங்களைப் பாதுகாத்தல், நினைவுச்சின்னங்களைப் பாதுகாத்தல், தொல் பொருள் ஆய்வு முடிவுகளை வெளியிடுதல், ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுதல், இத்துறை தொடர்பான கல்வியறிவை மக்களிடம் ஏற்படுத்துதல், சுற்றுப்புறத்தைப் பாதுகாத்தல், தொல்பொருள் சொத்துக்களைப் பாதுகாத்தல் என்று பல்வேறு பணிகள் தொல்லியல் துறையில் உள்ளன.

நிர்வகித்தல்
தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள சொத்துக்களைப் பாதுகாத்தல், மக்கள் பார்வையிடும் நினைவுச் சின்னங்களான மதுரை திருமலை நாயக்கர் மகால் போன்றவற்றைப் பாதுகாத்தல், பராமரித்தல், மக்களின் பார்வைக்காகத் திறந்து வைத்திருப்பதுடன் அவற்றைப் பராமரித்து சேவை செய்தல், பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டுதல், படப்பிடிப்புகளுக்கு, நிகழ்ச்சிகளுக்கு நடத்த அனுமதி கொடுத்து நிதி ஆதாரங்களை உருவாக்குதல், வர்த்தக நிறுவனங்களை நிர்வகித்து நடத்துதல், இத்துறைப் பணிக்காகப் தன்னார்வத் தொண்டு செய்வோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்றவையும் இத்துறையில் உள்ள முக்கியமான பணிகளாகும்.

தொல்லியல்துறையில் உள்ள வேலை வாய்ப்புகள்
தொல்லியல் துறையில் பல்வேறு வேலைவாய்ப்புகள் உள்ளன. கல்வெட்டாய்வாளர், அகழ்வாய்வாளர், தொல்லியல் அலுவலர், காப்பாட்சியர், உதவிக் கல்வெட்டுக் கண்காணிப்பாளர், தொல்லியல் துணைக் கண்காணிப்பாளர், பதிவு அலுவலர், மண்டல உதவி இயக்குநர் மற்றும் தொழில் நுட்பம் சார்ந்த பதவிகளும் அருங்காட்சியகக் கல்வி அதிகாரியின் பணியும் உள்ளன. தமிழ்நாடு அரசுத் தேர்வாணையத்தின் மூலமே இப்பணிகள் எல்லாம் நிரப்பப்படும்.

இத்துறையில் ஒருவர் கல்வெட்டாய்வாளராகப் பணியில் சேர்ந்தால் மண்டல உதவி இயக்குநர் பணி வரை பதவி உயர்வின் மூலம் வரமுடியும். கோயில், மலை, கண்மாய், மதகு, தனிக் கல், நடுகல் என்று பல்வேறிடங்களுக்கும் சென்று ஆய்வு செய்ய வேண்டியது இவர்களின் பணிகளாக உள்ளன. இத்துறையில் களப்பணி மிகவும் இன்றியமையாதது. அதனால் பல்வேறு இடங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து ஆய்வு செய்ய வேண்டும். இதனால் இத்துறையில் பணியில் சேரும் பணியாளர்களுக்கு உடல் ஆரோக்கியமும் மனநலமும் நீண்ட நேரம் தொடர்ந்து பணியாற்றக் கூடிய உடலமைப்பும் வெயில், மழை என்று பாராமல் பணியாற்ற வேண்டிய நிலையும் ஏற்படும். அத்தருணங்களிலும் கூட மனம் தளராமல் சேவை மனப்பான்மையுடன், அர்ப்பணிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும் இத்துறைப்பணிக்கு வர விரும்புவோர் தொல்லியல், வரலாறு, தமிழ் இலக்கியம் ஆகிய துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருத்தல் விரும்பத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.