டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஆசிரியர் தகுதித் தேர்வு: "ஹால் டிக்கெட்' இணையதளத்தில் வெளியீடு

தமிழகத்தில் ஏப்.29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதுவோருக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :11 ஏப்ரல் 2017, 3:57 am

தினமணி

தமிழகத்தில் ஏப்.29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதுவோருக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வுகள் (தாள்-1, தாள்-2) ஏப்ரல் 29, 30 தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த மார்ச் 6-ஆம் தேதி முதல் மார்ச் 22-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் விற்பனை செய்யப்பட்டன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் மார்ச் 23-ஆம் தேதி வரை பெற்றுக்கொள்ளப்பட்டன.
இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (தாள்-1) 2 லட்சத்து, 37 ஆயிரத்து, 293 பேரும், பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வுக்கு, 5 லட்சத்து, 2 ஆயிரத்து 964 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
இதன் மூலம் ரூ.33.50 கோடி ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு கிடைத்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பெறப்பட்ட விண்ணப்ப படிவங்கள் உடனடியாக சென்னையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டன.
இந்த நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவோருக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (www.trb.tn.nic.in) இணையதளத்தில் திங்கள்கிழமை மாலை வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் தங்கள் விண்ணப்ப எண், பிறந்த தேதியை குறிப்பிட்டு ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.