வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

இந்திய வனப் பணி தேர்வு: யூபிஎஸ்சி அறிவிப்பு

இந்திய வனத்துறையில் 2017-18 ஆம் ஆண்டிற்கான பணியிடங்களை நிரப்புவதற்கான இந்திய வனப் பணி தேர்வுக்கான அறிவிப்பை யூபிஎஸ்சி என

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:06 am

ஆர். வெங்கடேசன்

இந்திய வனத்துறையில் 2017-18 ஆம் ஆண்டிற்கான பணியிடங்களை நிரப்புவதற்கான இந்திய வனப் பணி தேர்வுக்கான அறிவிப்பை யூபிஎஸ்சி என அழைக்கப்படும் மத்திய மத்திய குடிமைப் பணிகள் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 110
பணி: Indian Forest Service Examination
தகுதி: கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல், தாவரவியல், வேதியியல், புவியமைப்பியல், கணிதம், இயற்பியல், புள்ளியியல் மற்றும் விலங்கியல் அல்லது விவசாயம், வனவியல் அல்லது பொறியியல் துறைகளில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 21 - 32க்குள் இருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, புதுச்சேரி
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.03.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 18.06.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.upsc.gov.in/sites/default/files/Engl_IFS_2017_0.pdf என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.