டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மீன்வளத் துறையில் உதவியாளர் பணி: வரும் 23 -க்குள் விண்ணப்பிக்கலாம்

மீன்வளத் துறை ஆய்வக அலுவலகத்தில் காலியாக உள்ள இரண்டு உதவியாளர் காலிபணியிடங்களுக்கு தகுதியானவர்கள் வரும் 23 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர்

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:27 pm

தினமணி

மீன்வளத் துறை ஆய்வக அலுவலகத்தில் காலியாக உள்ள இரண்டு உதவியாளர் காலிபணியிடங்களுக்கு தகுதியானவர்கள் வரும் 23 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை சேத்துப்பட்டில் உள்ள மீன்வளத் துறை ஆய்வக அலுவலகத்தில் 2 மீன்வள உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கு 1.1.2017 அன்று 18 வயது முதல் 35 வயதுக்குள்ளும், தமிழில் எழுதப் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். அதோடு நீச்சல், மீன்பிடித்தல், வலை பின்னுதல் மற்றும் அறுந்த வலைகளை பழுது பார்க்கவும் தெரிந்திருப்பது அவசியம்.
மீன்வளத் துறையில் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
குறிப்பிட்ட தகுதியுள்ளோர் முழு விவரங்களுடன் 'சென்னை மீன்வள துறை இணை இயக்குநர் (மண்டலம்), சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி.நகர், சென்னை-28'
என்ற முகவரியில் வரும் 23 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.