விண்ணப்பிக்கலாம் வாங்க.. ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசு வேலை
தமிழக அரசின் சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள 20 உதவியாளர், சமையலர், மருத்துவமனை


தமிழக அரசின் சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள 20 உதவியாளர், சமையலர், மருத்துவமனை பணியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிர்வாகம்: அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி, சென்னை
மொத்த காலியிடங்கள்: 20
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: அலுவலக உதவியாளர் - 02
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 10 ஆம் வகுப்பு தோல்வியடைந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பணி: சமையலர் - 03
பணி: மருத்துவமனை பணியாளர் - 09
பணி: கிளீனர்: - 01
பணி: துப்புரவு பணியாளர் - 05
தகுதி: 8 ஆம் வகுப்பு தோல்வியடைந்தவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். உயர்கல்வி படித்தவர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை.
வயது வரம்பு: விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயதுவரம்பு பிரிவினருக்கு ஏற்றவாறு மாறுபடுகிறது. OC பிரிவினர் 30 வயதுக்கு மிகாமலும், BC, MBC பிரிவினர் 32க்குள்ளும், SC,ST பிரிவினர் 35க்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம்: மாதம் ரூ.15,700 - ரூ.50,000
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக்கல்லூரி அரும்பாக்கம் சென்னை - 600 106 என்ற அலுவலகத்தில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படும் விண்ணப்பித்தை பெற்று, அதனை பூர்த்தி செய்து மேற்கண்ட அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.12.2019
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...