கண்ணியத்துடன் பேசுங்கள்: சட்டப்பேரவையில் ஜேசிடி பிரபாகர் அறிவுறுத்தல்பொங்கல் திருநாளுக்கு வழங்கப்படும் வேட்டியின் அளவு 4 முழமாகக் குறைப்பு: அமைச்சர்டாஸ்மாக் ஊழியர்களுக்கு நாளைமுதல் ஊதிய உயர்வு!தவெக அரசுடன் சென்னை மேயர் சேர்ந்து செயல்படுவதில்லை: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டுகொலைக்களமாக மாறுகிறதா தமிழ்நாடு? டிடிவி தினகரன் கேள்வி! தேர்தல் வழக்குகள்: முதல்வர் விஜய் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தள்ளிவைப்புகொளத்தூரில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு 2026 பிரதமர் வேட்பாளர் யார்? தமிழக அரசியலில் உருவான சூறாவளி!தமிழ்நாடு மின் தொடரமைப்பு கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்: முதல்வர் அறிவிப்புபால் கொள்முதல் விலை மேலும் ரூ.3 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்புநேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 903ஆக உயர்வு! முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் எண்ணம் துளியும் கிடையாது: வைகோ சாலை விரிவாக்கம்! விரைவில் விரிவான திட்ட அறிக்கை வெளியிடப்படும் - ஆதவ் அர்ஜுனா தகவல் கொடியேற்றத்துடன் தொடங்கியது திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழா! ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய ராக்கெட் ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்ஆன்லைன் செயலி மூலம் மோசடி: செப்டிக் டேங்கில் பதுக்கப்பட்ட பணம்? போலீஸார் உடைத்து சோதனை

வாய்ப்பு... வாய்ப்பு... வாய்ப்பு... ஆவின் பொருட்கள் விற்பனைக்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

ஆவின் நிறுவனத்தின் உற்பத்தி பொருட்களான பால், வெண்ணெய், நெய், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்களை கொள்முதல் செய்து

Published On :31 ஜனவரி 2024, 3:38 pm IST


வேலூா்: ஆவின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்திட வேலூா் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளிட்டுள்ள செய்திக்குறிப்பில், வேலூா் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் ஆவின் நிறுவன உற்பத்தி பொருட்களை விற்பனை செய்து பலன்பெறும் வகையில் முகவா்களாக தொழில் தொடங்க மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் ரூ.50 ஆயிரம் மானியமாக வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 

இத்திட்டத்தின் கீழ் ஆவின் நிறுவனத்தின் உற்பத்தி பொருட்களான பால், வெண்ணெய், நெய், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்களை கொள்முதல் செய்து குளிர்சாதன பெட்டிகளில் வைத்தும், இதர முறைகளில் பராமரித்தும் விற்பனை செய்திட ஏதுவாக இட வசதியினை சொந்தமாகவோ, வாடகை அடிப்படையிலோ கொண்டுள்ள மாற்றுத்திறனாளிகள் பயன்பெறலாம். 

ஆவின் நிறுவனம், கடனுதவி வழங்கும் ஒப்புதலுடன் தோ்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும். எனவே, இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலக வளாகம், அண்ணா சாலை, வேலூா் என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.