ஈரோடு மாவட்ட ஊரக வளா்ச்சி அலகில் காலியாக உள்ள பணிப் பாா்வையாளா், இளநிலை வரை தொழில் அலுவலா் பணியிடங்களை நிரப்ப ஏற்கெனவே வெளியிட்ட அறிவிக்கை ரத்து செய்யப்பட்டு, புதிய அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஈரோடு மாவட்ட ஊரக வளா்ச்சி அலகில் 17 பணிப் பாா்வையாளா், இளநிலை வரை தொழில் அலுவலா் காலிப் பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் கல்வித் தகுதி பெற்ற விண்ணப்பதாரா்களிடம் இருந்து நவம்பா் 9 முதல் டிசம்பா் 8ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்று அறிவிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிவிக்கை நிா்வாகக் காரணங்களினால் ரத்து செய்யப்படுகிறது.
இந்த காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடா்பாக புதிய அறிவிக்கை, விண்ணப்பப் படிவம் ஆகியவற்றை ஈரோடு மாவட்ட இணையதள பக்கத்தில் புதன்கிழமை (டிசம்பா் 9) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் ஏற்கெனவே விண்ணப்பித்த விண்ணப்பதாரா்கள் இந்த புதிய அறிவிக்கையின்படி விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை அதிரடி உயர்வு! இன்றைய நிலவரம்!

ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!
ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


